மருந்துகள் விலை உயர்வு: உற்பத்தியாளர்களுக்கு உதவ ஒட்டுமொத்த அமைப்பும் பாடுபடுவது ஏன்?

2 Min Read
- Advertisement -

உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, அக். 28- மருந்து உற்பத்தி யாளர்களுக்கு உதவ ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் பாடுபடுவது ஏன்? ஒன்றிய அரசின் கண்ணெதிரில் இதெல்லாம் நடக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறி யுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு நிர்ணயிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மூலக்கூறு மருந்துகளை பரிந்துரைக்காத மருத்து வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவற்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, சில்லறை வியாபாரிக்கு ரூ.2,700-க்கு கிடைக்கும் புற்று நோய் சிகிச்சை மருந்து, நோயாளி களுக்கு ரூ.27 ஆயிரம் என 10 மடங்கு அதிக விலையில் விற்கப்படுவது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி விடுத்தது.

கடந்த 12 ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, புற்று நோய் மருந்துகளின் லாப வரம்பை 30 சதவீதமாக நிர்ணயித்து இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. அதற்கு உச்சநீதிமன்றம், ‘‘இது முழு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. மற்ற மருந்துகளுக்கும் லாப வரம்பு நிர்ணயிக்காதது ஏன்?’’ என்று கேட்டது.

இநிலையில், நேற்று (27.10.2026) உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அய்ஸ்வர்வாவைப் பார்த்து நீதிபதிகள் கூறியதாவது:-

சில்லறை வியாபாரிக்கு விற்கப்படும் மருந்து விலைக்கும், நோயாளிகளுக்கு விற்கப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கும் பெருமளவு வித்தியாசம் காணப்படுகிறது. ஒன்றிய அரசு இதை அனுமதிக்கிறது. ஒன்றிய அரசின் கண்ணெதிரில் இதெல்லாம் நடக்கிறது. தறிக்கெட்டு நடக்க அனுமதிக்க வேண்டுமா?

மருந்து உற்பத்தியாளர்களுக்கு உதவ ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் பாடுபட்டுக் கொண்டிருப்பது ஏன்? தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் முற்றிலுமும் செயலிழந்த அமைப்பாக இருக்கிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அய்ஸ்வர்யா, ‘‘ஒட்டுமொத்தமருந்து உற்பத்தியாளர்களையும் கட்டுப்ப டுத்தக்கூடாது என்பதுதான் அரசின் கொள்கை. உலகிலேயே இந்தியாவில்தான் மருந்து விலை குறைவாக இருக்கிறது’ என்று கூறினார்.

இதையடுத்து, நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *