நிம்மாங்கரை, அக்.28 ‘‘திராவிட மாடல் – திமுக’’ ஆட்சியில் கிராமப் பெயர்களிலுள்ள ‘‘காலனி’’ அடையாளங்களை நீக்கிவிட்டு, புதிய பெயர்களை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
அதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் 11.10.2025 அன்று நடைபெற்றது,
அந்தக் கிராம சபைக் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், மல்லிக்குட்டை ஊராட்சிக்குட்பட்ட ‘‘நிம்மாங்கரை காலனி’’ ஆகிய கிராமத்தின் பெயரிலுள்ள ‘‘காலனி’’ என்கிற அடையாளத்தை நீக்கிவிட்டு ‘‘ஜாதி ஒழிப்புப் போராளி தந்தை பெரியார்’’ அவர்களின் போராட்ட வரலாற்றை நினைவூட்டும் வகையில் ‘‘பெரியார் நகர்’’ என்று பெயர் வைக்க வேண்டி முதல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கிராம மக்களின் ஒத்துழைப்போடு கையெ ழுத்து பெற்று ஊராட்சி செயலாளரிடம் அன்று வழங்கப்பட்டது.
02.10.2026 அன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் “பெரியார் நகர்” பெயரை வைக்க வேண்டி மீண்டும் தீர்மானம் எழுதப்பட்டு, தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதன் பயனாக 27.10.2026 அன்று கிராம மக்களிடம் அதிகாரிகள் ‘‘பெரியார் நகர்’’ பெயர் வைப்பதில் ஏதேனும் ஆட்சேபணை உள்ளதா? என்று கேட்டனர்.
கிராம மக்களின் பெருத்த ஆதரவு ‘‘பெரியார் நகர்’’ பெயர் வைப்பதின் பக்கம் இருப்பதால், இன்று மீண்டும் கிராம மக்களிடம் கையெழுத்து பெற்று, அதற்கான கடிதத்தைக் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மா.செல்லதுரை, தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கதிர்.செந்தில்குமார் ஆகிய இருவரும் இணைந்து கிராம ஊராட்சிச் செயலாளர் இரா.சின்னசாமியிடம் வழங்கினர்.
கிராம மக்களிடம் பெருத்த ஆதரவு உள்ளதால் விரைவில் கிராமத்திற்கு *”பெரியார் நகர்”* பெயர் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஊராட்சிச் செயலாளர் உறுதியளித்தார்.
