ஏழைகள் வாக்குப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு பணக்காரர்களுக்கு மட்டுமான இந்தியாவைக் கட்டமைக்க முயற்சி – ராகுல் காந்தி சாடல்

- Advertisement -

புதுடில்லி அக். 28- ‘வாக்குத் திருட்டு’ குறித்து காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக பேசி வருகிறது. ஆனால், இப்போதுதான் ‘வாக்குத் திருட்டு’ என்பது உயர் மட்டத்தில் இருந்து நடக்கிறது என்பதை ஒட்டுமொத்த நாடும் உணர்ந்து வருகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து முறைகேடாக பெயர்கள் நீக்கப்படுவதை ‘வாக்குத் திருட்டு’ என குறிப்பிடும் காங்கிரஸ் கட்சி, நீக்கப்பட்ட பெயர்களை வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 1-ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணிக்கு காங்கிரஸ் தலைமையிலா இண்டியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த பேரணியை வெற்றி கரமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, டில்லி திரிலோக்புரி பகுதியில் ‘வாக்களிக்கும் உரிமை – வாழ்வதற்கான உரிமை’ என்ற பெயரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று வாக்காளர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “வாக்களிப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமக னின் உரிமை. ஆனால், இன்று கோடிக்கணக் கான வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினையை நாங்கள் நீண்ட காலமாக எழுப்பி வருகிறோம். ஆனால், இப்போதுதான் ‘வாக்குத் திருட்டு’ மேல் மட்டத்தில் இருந்து நடக்கிறது என்பதை நாடு முழுவதும் உணர்ந்து வருகிறது. ஏழை மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள். நரேந்திர மோடி பணக்காரர்களுக்கு மட்டுமேயான இந்தியாவை உருவாக்குவதில் தீவிரமாக இருக் கிறார்.

இன்றைய கூட்டத்தில் 4 வாக்குச் சாவடி களில் இருந்து 416 வாக்காளர்களின் பெயர்கள் சட்ட விரோதமாக நீக்கப் பட்டதை அனைவரும் பார்த்தனர். இது குறித்து நாங்கள் ஞானேஷ் குமாரிடம் கேள்வி எழுப்பும்போதெல்லாம் அவர் எந்த பதிலும் அளிப்பதில்லை.

ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு இந்த அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பும். மக்களின் வாக்குரிமையை நாங்கள் பாதுகாப்போம்” எனத் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *