சென்னை, அக்.28 தமிழகத்தில் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப்படி தலா 10 சதவீதம் உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உயர்வு கடந்த செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் சுமார் 74,000 கைத்தறி நெசவாளர்கள் பயனடைவார்கள்.
2026-2027-ஆம் ஆண்டுக்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின்போது, சட்டப்பேரவையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி, கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் தற்போது பெற்று வரும் அடிப் படைக் கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் (185 %) உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
