தஞ்சை பெரிய கோயில் பெயரால் மோசடி தஞ்சை பெரிய கோயில் படத்துடன் கூடிய ஆயிரம் ரூபாய் நோட்டு போலியானது ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் அறிவிப்பு!

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக். 28- தஞ்சை பெரிய கோயில் படத்துடன் கூடிய 1,000 ரூபாய் நோட்டு போலியானது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 1954 மற்றும் 1975-களில் வெளியிடப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளில் தஞ்சை பெரிய கோயிலின் ஒளிப்படம் அச்சிடப்பட்டு இருந்தது. கள்ளநோட்டுகளை கட்டுப்படுத்த கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டன.

இதன்பிறகு புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. தற்போது 10, 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இந்த சூழலில் தஞ்சை பெரிய கோயில் படம் அச்சிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்திருப்பதாக படங்களுடன் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று (27.10.2026) சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “புதிதாக 1,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது போலியானது. புதிய 1,000 ரூபாய் நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது அவசியம்” என கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *