அருணாச்சலப் பிரதேசத்தில் தீவிரமடையும் போராட்டம் மோடி அரசுக்கு எதிராக அணிதிரளும் மக்கள்

1 Min Read
- Advertisement -

இடாநகர், அக்.27- பா.ஜ.க. ஆளும் அரு ணாச்சலப் பிரதேசத்தில் ஒன்றிய அரசால் முன் மொழியப்பட்டுள்ள 11,200 மெகாவாட் சியாங்நீர்மின் திட்டத்திற்கு எதிராகச் சியாங், மேல் சியாங் மற்றும் கிழக்கு சியாங் மாவட்டங்களில் அக். 23 அன்று 12 மணி நேரமுழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத் தின் போது, பாசிகாட், டைட்-டைம் மற்றும் மேபோ பகுதிகளில் போராட்டம் நடைபெற் றது. இந்தப்பகுதியில் போராட்டக்காரர்களைக் கலைக்கக் காவல்துறை கண்ணீர்ப் புகைக்குண்டு களைப் பயன்படுத்தியதால், அங்கு மோதல் வெடித்தது.பெண்கள் உட்படப் பலரும், பத்திரிகையாளர் ஒருவரும் காயமடைந்தனர். பல வாகனங்கள் சேதம டைந்தன. காவல்துறையின் இந்தத் தாக்குதலால் அரு ணாச்சல பிரதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க மோடி அரசு அதிரடிப் படை வீரர்களைக் குவித் துள்ளது. மகாராட்டிரா மாநிலம் நவி மும்பையி லிருந்து சுமார் 250 வீரர் களைக் கொண்ட இரண்டு விரைவு அதிரடிப் படைப் பிரிவுகளை இந்திய விமானப் படையின் போக்குவரத்து விமானம் மூலம் பாசிகாட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு ஒன்றிய உள்துறை அமைச்சர் 24.10.2026 அன்று உத்தரவிட்டிருந்தார். இந்த அதிரடிப் படை வீரர்கள் குழு அக். 25 அன்று பணியைத் தொடங்கியது.

ஏற்கெனவே அரு ணாச்சலப் பிரதேசத்தில் இரண்டு முதல் மூன்று சிஆர்பிஎப் பட்டாலி யன்கள் நிரந்தரமாகப் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

மக்கள் எச்சரிக்கை

ஆனால் அதிரடிப் படையை குவித்த பின்புதான் அருணாச்சலப் பிரதேசத்தில் மக்கள் போராட்டம் தீவிரமடை யும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் எதிர்க்கட்சி கள் இல்லை (எதிர்க்கட்சி அந்தஸ்து எந்த கட்சிக்கும் இல்லை) என்றால், நாங்கள் (மக்கள்) இருக்கிறோம்; சியாங் நீர்மின் திட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம்; போராட்டம் இனிமேல் தீவிரமடையும் என சியாங், மேல் சியாங் மற்றும் கிழக்கு சியாங் மாவட்ட மக்கள், மாணவ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் அருணாச்சலப் பிரதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *