உணவுப் பிரச்சினையில் மதக் குறுக்கீடு!

- Advertisement -

 

இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவமும், மாநிலங்களின் தனித்துவமான கலாச்சார அடை யாளங்களும் மதிக்கப்பட வேண்டிய மிக முக்கியக் கூறுகளாகும்.

ஆளுநரின் தடை உத்தரவு

அந்த வகையில், இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ள கேரளம், தனது தனித்துவமான உணவுப் பண்பாட்டிற்கும் கலாச்சாரத் திற்கும் பெயர் பெற்றது. இந்நிலையில், கேரளாவின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ஓம் பிரகாஷ் மாத்தூர், ஆளுநர் மாளிகையான லோக் பவனில்,  இனி காய்கறி உணவு மட்டுமே சமைக்கப்பட வேண்டும் என்றும், அங்கே இறைச்சி வகை(மீன் முட்டை உட்பட) உணவுகள் சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிறப் பித்துள்ள உத்தரவு அம்மாநிலத்தில் பெரும் அரசியல் கொந்தளிப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே அதிக அளவில் அசைவ உணவை விரும்பி உட் கொள்ளும் மாநிலங்களில் கேரளம் முன்னணியில் உள்ளது.

அங்குள்ள மக்களின் அன்றாட உணவில் மீன் மற்றும் மாட்டிறைச்சி ஆகியவை மிக முக்கியப் பங்கு வகிக் கின்றன. இது வெறும் உணவு முறை மட்டுமல்ல, மாறாக அம்மக்களின் பல நூற்றாண்டு கால கலாச்சாரத்தின் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.

அவமதிக்கும் செயல்

அனைத்துச் சமூகத்தினரும், அனைத்துப் பிரிவு மக்களும் மத, ஜாதி பேதமின்றி விரும்பி உண் ணும் உணவாக இறைச்சி குறிப்பாக மாட்டிறைச்சி அங்கு விளங்கும் சூழலில், ஒரு மாநிலத்தின் அரசியல மைப்புத் தலைவராக உள்ள ஆளுநர் மாளிகையிலேயே இறைச்சி வகை உணவிற்கு தடை போடுவது, பெரும்பான்மை மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களை அவமதிக்கும் செயல்  ஆகும்

மனிதனின் அடிப்படை உரிமை களில் உணவுத் சுதந்திரமும் ஒன்றாகும். தான் என்ன  உண்ண வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. ஒரு மாநிலத்தின் ஆளுநர் மாளிகை என்பது பொதுவான அரசுச் சொத்து; அங்கே பல்வேறு தரப்பு மக்களும், வெளிநாட்டு விருந்தினர்களும், அரசியல் தலைவர்களும் வந்து செல் கின்றனர்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் ஆளுநரின் இந்த நடவடிக் கைக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரி வித்துள்ளன. “ஆளுநர் தனக்குப் பிடித்தமான சைவ உணவை உட்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், ஒட்டுமொத்த மாளிகையின் சமையலறையையும் மதவாத உணவுவகையாக மாற்றுவது, பெரும்பான்மைக் கேரள மக்களின் உணவு உரிமையின் மீது கைவைப்பதாகும்”.

ஒரு மாநிலத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தின் மீது திணிக்கப்படும் திணிப்பாகவே இது பார்க்கப்படுகிறது. தனிப்பட்ட ஒருவரின் உணவுப் பழக்க வழக்கங்களை அரசு மாளிகையின் மீது திணிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இந்தியாவில் இது போன்ற பிற சர்ச்சைகள் இந்தியாவில் உணவு மற்றும் கலாச்சாரம் சார்ந்த விவாதங்கள் புதியவை அல்ல. இதற்கு முன்பும் கூட சில ஆளுநர்கள், அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் எடுத்த இது போன்ற முடிவுகள் தேசிய அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன:

பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் பொது இடங்கள்

நாட்டின் பல கல்வி நிறுவனங் களில் மாணவர்களின் உணவுத் தட்டுகளில் இறைச்சி வகை உணவு களைத் தடை செய்ய வேண்டும் என்ற முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளன.

சில அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகளில் காய்கறி உணவு மட்டுமே பரிமாறப்படுவது குறித்த விவாதங் கள் எழுந்துள்ளன. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு இது எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

பதவிகளின் நடுநிலை

ஆளுநர் போன்ற அரசியல் மைப்புப் பதவிகளில் உள்ளவர் கள், தாம் சார்ந்திருக்கும் மாநி லத்தின் கலாச்சாரத்தையும், பன் முகத்தன்மையையும் மதித்து நடக்க வேண்டும் என்பதே பொது வான எதிர்பார்ப்பாக உள்ளது. மாறாக, தனிப்பட்ட உணவுப் பழக்கவழக்கங்களை நிர்வாக உத்தரவுகள் மூலம் திணிப்பது மாநில மக்களிடையே தேவையில்லாத வேற்றுமைகளையும் பிளவுகளையும் உருவாக்குகிறது.

அண்மையில் டில்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்ய மற்றும் சீன அதிபர்கள் விருந்தில் பங்கேற்கவில்லை, காரணம் பாரம்பரிய உணவு என்ற பெயரில் காய்கறிகளில் செய்த விதவிதமான உணவு வகைகள் இடம் பெற்றன.

சூழலுக்கு ஒவ்வாத இந்த உணவு உட்கொண்டால் உடல் நலம் பாதிப்படையும் என்று அதிபர்களின் ஆலோசகர்கள் கூறியதால் அவர்கள் இந்தியா கொடுத்த விருந்தை தவிர்த்து விட்டனர்.

புயலைக் கிளப்பியது

இந்த நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு சென்ற பிரேசில் பிரதமருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, உடல் நலம் சீர்குலந்தது இதற்குக் காரணம் இந்தியாவில் அவர் உட்கொண்ட சில வகை உணவுகள் என்று அந்த நாட்டு நாளிதழ்கள் கூறுகின்றன. இதை இந்தியா மறுக்கவும் இல்லை – இதுதொடர்பான செய்தி குறித்து கண்டனம் தெரிவிக்கவும் இல்லை. டில்லி பல்கலைக்கழக விடுதியில் உணவு மேசைகளில் இறைச்சி உணவு உண்பவர்களுக்கு இடமில்லை என்ற அறிவிப்பு – பெரும் புயலைக்கிளப்பிய நிலையில் அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பின் கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு வெளியில் இருந்து கொண்டுவந்து உண்பதற்கு தடை என்று கூறி பிறகு அதையும் நீக்கியது குறிப்பிட்த்தக்கதாகும்

அதே போன்று கேரளாவின் புதிய ஆளுநரின் இந்த ‘சைவ உணவு மட்டுமே’ என்ற உத்தரவு, வெறும் சமையலறை சார்ந்த பிரச்சினையல்ல; இது இந்தியாவின் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை மற்றும் அவரவர் கலாச்சாரத்தைப் பின்பற்றும் உணவுச் சுதந்திரம் தொடர்பான ஆழமான விவாதத்தை மீண்டும் மேடைக்குக் கொண்டு வந்துள்ளது. கேரளம் போன்ற மாநிலங்களில் உணவு என்பது வெறுமனே பசி தீர்க்கும் விஷயம் அல்ல, அது அவர்களின் வாழ்வியலோடு கலந்த ஒரு கலை. எனவே, ஜனநாயக மாண்புகளையும், மக்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டியது நாட்டின் உயர்பதவிகளில் இருப்பவர்களின் முக்கியக் கடமை யாகும்.

– சரா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *