சென்னை, அக்.28- தமிழ்நாடு மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை தயாரித்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. விழாக் காலம் நெருங்கும் நிலையில், ஆவின் பொருட்களைக் கூடுதலாக உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், நெய், வெண்ணெய், தயிர் உள்ளிட்ட 67 ஆவின் பொருட்களின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று (28.10.2026) முதல் அமலுக்கு வருகிறது. மூலப்பொருட்களின் விலை, பால் கொள்முதல் செலவு மற்றும் பிற செலவுகள் அதிகரிப்பால் நெய், மில்க் ஷேக் உட்பட 67 ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 100 கிராம் வெண்ணெய் ரூ.60இல் இருந்து ரூ.70 ஆகவும், 100 மி.லி. நெய் ரூ.85இல் இருந்து ரூ.95 ஆகவும், 100 கிராம் ரசகுல்லா ரூ.45இல் இருந்து ரூ.50 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 250 கிராம் குலோப் ஜாமுன் ரூ.100இல் இருந்து ரூ.115 ஆகவும், 250 கிராம் மைசூர்பாக் ரூ.140இல் இருந்து ரூ.160 ஆகவும், 200 மி.லி. லஸ்ஸி ரூ.20இல் இருந்து ரூ.23 ஆகவும், 500 மி.லி. ஆவின் நெய் ரூ.365இல் இருந்து ரூ.400 ஆகவும் அதிகரித்துள்ளது.
200 மி.லி. மில்க் ஷேக் விலை ரூ.30இல் இருந்து ரூ.35 ஆகவும், 500 மி.லி. தயிர் ரூ.35இல் இருந்து ரூ.40 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. 50 கிராம் பிரிமியம் தயிர் கப் ரூ.5இல் இருந்து ரூ.7 ஆகவும், ஒரு கிலோ பிரிமியம் தயிர் ரூ.120இல் இருந்து ரூ.130 ஆகவும் அதிகரித்துள்ளது. பெட் பாட்டிலில் விற்கும் மோர் ரூ.12இல் இருந்து ரூ.14 ஆகவும் உயர்ந்துள்ளது.
அரிசி விலை
ஒரு மாதத்தில் கிலோவுக்கு
ரூ.8 முதல் ரூ.23 வரை உயர்வு!
ரூ.8 முதல் ரூ.23 வரை உயர்வு!
சென்னை, அக்.28- உலகளவில் நிலவி வரும் எல்நினோ பருவகால மாற்றம் காரணமாக பருவமழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் உற்பத்தி பாதிப்படைந்ததால் தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த சில நாட்களாக கிலோவுக்கு ரூ.1, ரூ.2 என அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் அரிசி விலை மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.590 வரையும், கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.23 வரையும் அதிகரித்து உள்ளது.
