சென்னை, அக். 28– தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை பெருநகர பகுதி மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இயங்கும் கான்ட்ராக்ட் கேரேஜ் ஆட்டோ ரிக்சாகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசாணையின்படி இந்த புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 67இன் கீழ் இதற்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பழைய அரசாணைகள் ரத்து செய்யப்பட்டு இந்த புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.
அதன்படி, ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தூரம் 1.8 கிலோ மீட்டராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ. 25 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மலைப்பாதைகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் கூடுதலாக பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ. 30 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரவு நேர கட்டணம் (இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை) சாதாரண கட்டணத்தை விட 1.5 மடங்கு கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காத்திருப்புக் கட்டணம் 1 நிமிடத்திற்கு தலா ரூ. 1 என நிர்ணயம் செய்யப்பட்ட்டுள்ளது.
