ஆளும்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி போல காவல்துறை செயல்படக் கூடாது – கனிமொழி எம்.பி.

1 Min Read
- Advertisement -

தூத்துக்குடி, அக். 28- ஆளும் கட்சியின் அய்டி விங்க் போல காவல்துறை செயல்படக்கூடாது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று (27.10.2026) செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

தவெக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு தமிழ்நாடு முழுவதும் இதுவரை 50 கைதிகளுக்கு மேல் சிறைகளில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். ஒரே நாளில் 17 கைதிகள் தப்பிச் செல்லக்கூடிய அவலமான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

நடக்கக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டும்போது, காவல் துறையினர் ஆளும்கட்சிக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களாகவும், அரசியல் தலைவர்களுக்கு பதில் சொல்லக் கூடியவர்களாகவும் மாறியிருக்கின்றனர். காவல் துறை அவர்களுடைய பணிகளை செய்ய வேண்டுமே தவிர, ஆளும்கட்சியின் அய்டி விங்க் போல செயல்படக் கூடாது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. சட்டம் –- ஒழுங்கு சீர்குலைவை கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 31ஆம் தேதி திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஆவின் பொருட்களின் விலையையாவது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அதையும் அவர்கள் செய்யவில்லை. இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *