நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றிய முன்னாள் திராவிடர் கழக தலைவர் மருதூர் ராமையன் (வயது 75) அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று (27.10.2026) மாலை 5 மணி அளவில் மருதூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும். நாகை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செய்யப்பட்டது. மருதூர் ராமையாவிற்கு மனைவி ரா.செந்தாமரை, மகள் மல்லிகா வீரமணி, மகன் ரா.ரவி ஆகியோர் உள்ளனர். அவர்களுக்கு கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
