சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் “பன்முகத் தளத்தில் பெரியாரியம்” – ஆய்வுக் கட்டுரைகள் எழுதலாம்!

- Advertisement -

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி இருக்கை, அறிஞர் அண்ணா இருக்கை, முத்தமிழறிஞர் தமிழ்வேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மய்யம் சார்பில் “பன்முகத் தளத்தில் பெரியாரியம்” என்னும் பொருண்மையில் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கிற்காக ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப் பட்டுள்ளன.

“பெரியாரின் தனித்துவப் பண்புகள், மனித மாண்புகளைப் போற்றிய பெரியார், பெரியாரின் தன்னல மறுப்பு, சுயசிந்தனை மரபில் பெரியார், பெரியாரின் சொற்பொழிவு உத்திகள், பெரியாரின் எழுத்து நயம், பெரியாரின் கல்வியியல் சிந்தனைகள், பெரியாரின் சுயமரியாதைக் கருத்தியல் உள்ளிட்ட 25 தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்பட்டுள்ளன. ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள் கட்டுரைகளை வழங்கலாம். ஆய்வுக் கட்டுரைகள் முறையான ஆராய்ச்சி நெறிமுறைகளைப் பின்பற்றியும் கருதுகோளை மய்யமிட்டதாகவும் புது விதமான ஆய்வுப் பார்வையை வெளிப்படுத்துவ தாகவும் பிழைகளின்றியும் அமைதல் வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுச் சுருக்கத்தை 10-11-2026 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். கட்டுரைகளை வழங்க இறுதி நாள் 20-11-2026. ஆய்வுச் சுருக்கம் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:  KALAIGNARRESEARCH @PERIYARUNIVERSITY.AC.IN.  தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள், பின்னர் நூலாகத் தொகுத்து வெளியிடப்பட உள்ளது. விருப்ப முள்ளோர் கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *