கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.10.2026

2 Min Read
- Advertisement -

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பத்திரிகைச் சுதந்திரத்திற்குப் பாதிப்பு: ஒன்றிய அரசின் தரவுத் தனியுரிமை சட்டத்திற்கு எதிராக 21 ஊடக நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு: என்.டி.டி.வி., சி.என்.என்.- நியூஸ்18  உள்ளிட்ட 21 ஊடக நிறுவனங்கள், புலனாய்வுப் பத்திரிகையையும் செய்தி ஆதாரங்களின் பாதுகாப்புத் தன்மையையும் பாதிக்கும் எனக் கூறி ஒன்றிய அரசின் தரவுத் தனியுரிமை சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளன.

தி இந்து:

* விலைவாசி உயர்வு குறித்து அரசுக்கு கவலையில்லை; வாக்குகளை திருடுவதில் தான் கவனம்: மல்லிகார்ஜுன கார்கே: பண்டிகைக் காலத்தில் மக்கள் கடுமையான விலைவாசி உயர்வால் அவதிப்படும் நிலையில், அரசு வாக்குத் திருட்டில் கவனம் செலுத்துவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு. நவம்பர் 1-ஆம் தேதி டில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் பேரணியில் மக்கள் பங்கேற்க வேண்டுகோள் விடுத்த அவர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவும், வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (SIR) உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

தி டெலிகிராப்:

* “30 விநாடிகளில் போராட்டங்களை நிறுத்திவிடலாம்”: ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய மோடியிடம் வலியுறுத்துமாறு டில்லி வணிகர்களிடம் ராகுல் காந்தி வேண்டுகோள்: நவம்பர் 1-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் பேரணியை ஒத்திவைக்குமாறு வணிகர் அமைப்பு கோரியுள்ள நிலையில், பண்டிகைக் கால வணிகப் பாதிப்பை கருத்தில்கொண்டு ராகுல்காந்தி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வாகாத ஓபிசி விண்ணப்பதாரர்! திரிபுராவைச் சேர்ந்த ஓபிசி விண்ணப்பதாரர் ஜெயந்த் தேவ்நாத், வயது தளர்வுடன் 2018-ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புத் தேர்வில் 55.1 மதிப்பெண்கள் பெற்றும் தேர்வாகவில்லை. ஆனால், பொதுப் பிரிவைச் சேர்ந்த சாகர் தேவ்நாத் 46.26 மதிப்பெண்களுடன் தேர்வானார். ஓபிசி பிரிவில் கட்-ஆப் 60 மதிப்பெண்கள் இருந்ததாகவும், வயதுத் தளர்வு பெற்ற ஓபிசி விண்ணப்பதாரர் பொதுப் பிரிவில் போட்டியிட முடியாது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்தது. இடஒதுக்கீடு சலுகை பெற்றவர்களும் பொதுப் பிரிவு காலியிடங்களுக்கு போட்டியிடலாம் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சரியான தன்மையை உச்சநீதிமன்றம் தற்போது ஆய்வு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *