கோவை, அக்.27 கோவை மாணவன் அகிலனின் மரணத்திற்கு நீதி கேட்டு அனைத்து முற்போக்குக் கட்சிகள் மற்றும் மாணவர் அகிலனின் பெற்றோர், உறவினர்கள் திரளாகப் பங்கேற்று அய்ந்து நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று (26.10.2026) 6 ஆம் நாளாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்துவரும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாலை 4 மணியளவில் அனைத்து முற்போக்கு இயக்கங்களின் தலை வர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. சட்டமன்ற குழுத் தலைவர் க.மாரிமுத்து, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், கோவை ஆறுச்சாமி, திராவிட தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அகிலனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் முற்போக்கு இயக்கங்களை சார்ந்த தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினர்.
பங்கேற்ற கழகத் தோழர்கள்
கோவை. மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரன், கழக மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் மு.வீரமணி, சுந்தராபுரம் தி.க.வெற்றிச்செல்வன், பீளமேடு பகுதிச் செயலாளர் ரமேஷ், மேட்டுப்பாளையம் ரெங்கசாமி, காரமடை அ.மு.ராஜா உள்ளிட்டத் தோழர்கள் பங்கேற்றனர்.
