தெற்கு ரயில்வேயில் அதிரடி நடவடிக்கை! ரூ.12.36 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் – 242 குழந்தைகள் மீட்பு!

- Advertisement -

சென்னை, அக். 26- தெற்கு ரயில்வே மண்டலத்தில் நடப்பு நிதியாண்டின் (2026-2027) கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் மூலம் ரூ.12.36 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 2,900 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று (25.10.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பின் முக்கிய அம்சங்கள்:

குட்கா மற்றும் ஹவாலா பணம்

ரயில்களில் கடத்த முயன்ற தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்றங்கள் கண்டறியப்பட்டு, ரூ.12.36 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ எடையுள்ள ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் பெட்டி

சென்னை ரயில்வே கோட்டத்தில் மகளிருக்கான சிறப்புப் பெட்டிகளில் விதிமீறிப் பயணித்த 309 ஆண் களிடமிருந்து ரூ.4.07 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் பயணித்த 565 பேரிடமிருந்து ரூ.5.11 லட்சம் அபராதம் பெறப்பட்டுள்ளது.

அனுமதியின்றி வாகனம் நிறுத்துதல்

ரயில் நிலையங்களில் அனுமதியின்றி வாகனம் நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பாக 12,112 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.55.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.:

குழந்தைகள் மீட்பு

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சுற்றித் திரிந்த 242 குழந்தைகள் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

97 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 110 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.19.06 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் 16 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் மட்டும் சென்னை ரயில்வே கோட்டத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 2,900 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *