எஸ்அய்ஆர் ரத்துக் கோரி கேரளா போல் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானம் வேண்டும்! மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

1 Min Read
- Advertisement -

வேலூர், அக். 26- வேலூரில் நேற்று (25.10.2026) நடந்த மருத்துவ முகாமில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒன்றிய பாஜ அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள எஸ்அய்ஆர் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 13.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட மாபெரும் சதி என்பது பத்திரிகைப் புலனாய்வு மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். நீக்கப்பட்ட 13.5 கோடி வாக்காளர்களையும் மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நாடு முழுவதும் பாஜ தவிர்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன. இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறும் விளக்கங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

கேரள சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து எஸ்அய்ஆர் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அதேபோல், விஜய் தலைமையிலான தவெக அரசும் உடனடியாக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, ஒன்றிய அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *