குழந்தைகளை பெற்றோர் ஒப்படைக்கக் கோரும் வழக்குகளில் நீதிமன்றம் கடமை தவறக்கூடாது! சென்னை உயர்நீதிமன்றம்

2 Min Read
- Advertisement -

சென்னை, அக்.25 ‘குழந்தைகளை ஒப்படைக்கக் கோரிய வழக்குகளில், குழந்தைகளிடம் நேரில் விசாரிக்கவும், அதன் அடிப்படையில் உத்தரவுகள் பிறப்பிக்கவும், தனக்குள்ள கடமையை நீதிமன்றம் தவிர்க்கக்கூடாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த பெண், விருதுநகரைச் சேர்ந்த நபரை, 2019 இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குழந்தைகள் இருவரும் தந்தையின் பராமரிப்பில் இருந்தனர். குழந்தைகளை நிரந்தரமாக தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, மனைவி தரப்பில் புதுச்சேரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான உத்தரவு வரும் வரை, குழந்தைகளை தன்னிடம் கணவர் உடனே ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இடைக்கால மனுவையும் மனைவி தாக்கல் செய்தார். குழந்தைகளைத் தாயாரிடம் ஒப்படைப்பது, அவர்களின் நலனுக்கு எதிரானது எனக்கூறி, அந்த இரண்டு மனுக்களையும், புதுச்சேரி குடும்ப நல நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி பிறப்பித்த
உத்தரவு

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், குழந்தைகளின் தாயார் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

மண விலக்கு வழக்குகளில், குழந்தை களை ஒப்படைக்ககோரி தாக்கலாகும் மனுக்களை நீதிமன்றம் விசாரிக்கும் போது, பெற்றோரின் நிலையில் இருந்து கையாளுகிறது. சொத்து தொடர்பான வழக்குகளை கையாளுவது போல, இத்தகைய வழக்குகளை அணுக முடியாது. குழந்தைகளின் நலனை தீர்மானிப்பதே, இத்தகைய வழக்குகளில் முதன்மையான விஷயம்.

நீதிமன்றத்தின்
முதன்மையான கடமை

அதைக் கண்டறிய, குழந்தைகளை அழைத்து, அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ளும் கடமை, நீதி மன்றத்துக்கு உண்டு. குழந்தைகள், பெற்றோரை அழைத்து, அவர்களுடன் பேசி, அதன்பின்னரே, தன் முடிவை உறுதிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மற்ற அறிக்கைகளை, நீதிமன்றம் சார்ந்து இருக்கலாம். இதுவே, நீதிமன்றத்தின் முதன்மையான கடமை.

முற்றிலும்
சட்ட விரோதமானது!

இதை, புதுச்சேரி குடும்ப நல நீதிமன்றம் பின்பற்றவில்லை. மாறாக, குழந்தை நலக்குழுவின் அறிக்கையை மட்டுமே அடிப்படையாக வைத்து, மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. அறிக்கையை கண்மூடித்தனமாக நம்பி, சில தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, புதுச்சேரி நீதிமன்றம் மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. இத்தகைய நடைமுறை முற்றிலும் சட்ட விரோதமானது.

குடும்ப நல நீதிமன்ற உத்தரவுகள் ரத்து!

குழந்தைகளை நேரில் விசாரிப்ப தற்கும், அதன் அடிப்படையில் உத்த ரவுகளை பிறப்பிப்பதற்கும், தனக்குள்ள கடமையை நீதிமன்றம் தவிர்க்கக்கூடாது. மேலும் ஒரு குழுவிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையை மட்டுமே அடிப்படையாக வைத்து, நீதிமன்றம் செயல்பட இயலாது. எனவே, புதுச்சேரி குடும்ப நல நீதிமன்ற உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

புதுச்சேரி குடும்ப நல நீதிமன்றம், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரை நேரில் அழைத்து பேசி, சட்டத்தின்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இனி இத்த கைய வழக்குகளில், நீதிமன்றம் குழந்தை களையும், பெற்றோரையும் அழைத்து பேசி, முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு  நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *