சோலையார்பேட்டை, அக். 25- திருப்பத்தூர் மாவட்டம், சோலையார்பேட்டை நகர கழகக் கலந்துரையாடல் கூட்டம் 24.10.2026 அன்று இரவு 7.30 மணியளவில் சோலையார்பேட்டை ஆர். எஸ். மகால் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு சோலையார் பேட்டை மண்ணின் மைந்தர் மாவட்ட கழக துணைத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். தங்க அசோகன் சோலையார் பேட்டை நகர அமைப்பாளர் வரவேற்றார்.
மேலும் இக் கூட்டத்தில் பெ.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்), கோ.அன்புச்சேரன் (வாணியம்பாடி நகர தலைவர்), கே.இரோஜேந்திரன் (பொதுக்குழு உறுப்பினர் சோலையார்பேட்டை), பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்), கோ.திருப்பதி (மாவட்டச் செயலாளர் ப.க.), ரமேஷ் (கலந்திரா பொறுப்பாளர்) க.இனியவன் (மாணவர் கழகம்) க.உதயவன் (மாணவர் கழகம்). மேலும் கழக தோழர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இக் கூட்டத்தில் டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவை (சுயமரியாதை நாள்) மிகச்சிறப்பாக நடத்துவது. மேலும் தந்தைபெரியார் 148ஆம் பிறந்தநாள் விழாவையொட்டி ஆசிரியர் அவர்களின் வழிகாட்டு தலின் படி பெரியார் பட ஊர்வலம், பேரணி, தந்தைபெரியார் பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, கொள்கைக் குடும்ப விழா என்று அனைத்தையும் மிகச்சிறப்பாகவும், எழுச்சியுடனும் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் நடைபெற்றது.
இதில் சமூக நீதி – சமத்துவத்திற் கான பெரியார் நடை மற்றும் நிலுவையில் உள்ளது. இதை டிசம்பர் 2 கழகத்தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் அன்று மிகச் சிறப்பாக நடத்துவது. இதற்கு முழு ஒத்துழைப்பையும் மாவட்டக் கழகத்திற்கு சோலையார்பேட்டை நகர கழகம் அளிக்கும் என்றும், மேலும், அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் உலாவரும் “App” களில் ஜோதிடம், ஜாதகம் சார்ந்த மூட நம்பிக்கைகள் பரப்பும் விதமாக முக்கிய திரைப்பட நடிகர்கள், பிரமுகர்கள் மூலம் தொடர்ந்து விளம்பரம் செய்து, மக்களை மூளைச் சலவை செய்து பணம் பறிக்கும் செயல் நடைபெற்று வருகிறது.
நவீன தொழில்நுட்பத்தை தவ றான வழியில் பயன்படுத்தும் சமூக ஊடகங்களிடம், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் விதமாக நாமும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் விழிப்பு ணர்வு பிரச்சாரங்களை மேற் கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கழக பொதுக் குழு உறுப்பினர் கே.இராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.
