அரிசியை பாலிஷ் போட்டு விற்பதுதான் மாற்றமா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

- Advertisement -

சென்னை, அக்.25- மக்களுக் கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் மாற்றமா? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்றுக் கொள்ளை அடிப்பது தான் டம்மி முதல்-அமைச்சர் சொன்ன மாற்றமா?

அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது.

அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர்.

கம்பத்தில் பாலிஷ் செய்யப் பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் – அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

2007இல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்-அமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள்.

ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை?  என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும் என அதில் பதிவிட் டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *