சென்னை, அக். 23- தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய திமுக ஆட்சியின் கடைசி 6 மாதங்களில் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்து வருவதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து ஒப்பந்தங்களை ரத்து செய்யும் நடவடிக்கைகள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாமல்லபுரத்தில் 74 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வு நிறுவனத் தின் புதிய வளாகத்திற்கான விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தத்தையும் அரசு ரத்து செய்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் தேர்தலுக்கு முன்பே கோரப்பட்டு, நிதி ஏலங்கள் திறக்கப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிர்வாகக் காரணங்களை குறிப் பிட்டு இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பது கவனத்தை பெற்றுள்ளது. மாமல்லபுரத்தில் அமையவுள்ள புதிய வளாகம் நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான ஆய்வு, பயிற்சி உள்ளிட்ட பணி களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மேற்கொள்ள நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒப்பந்தம் ரத்து செய் யப்பட்டதால் அடுத்தகட்ட நடை முறைகளை மீண்டும் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியில் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்வது அரசின் நிர்வாக நடைமுறையாக இருந்தாலும், அவற்றை ரத்து செய்வதற்கான காரணங்களை வெளிப்படையாக விளக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் ரத்து செய்வதால் ஏற்படும் காலதாமதம், கூடுதல் செலவுகள் மற்றும் திட்ட செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். மாமல்லபுரம் திட்டத்தில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான விரிவான காரணங்கள் இதுவரை தெளிவாக வெளியாகவில்லை. புதிய ஒப்பந்தம் விரைவில் கோரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய ஒப்பந்தம் எப்போது வெளியிடப்படும், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி எப்போது தொடங்கும், இதனால் திட்டத்தின் கால அட்டவணையில் மாற்றம் ஏற்படுமா என்பதற்கான தெளிவான விளக்கம் இல்லை.
தொடர்ந்து ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகும் நிலையில், அவற்றுக்கான காரணங்களை மக்களுக்குத் தெரிவிப்பதுடன், திட்டங்கள் தாமதமின்றிச் செயல் படுத்தப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்தங்களை ரத்து செய்வதோடு நின்றுவிடாமல், பொதுமக்களின் நிதி வீணாகாமல் திட்டங்களை விரைந்து நிறை வேற்றுவதிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய எதிர்பார்ப்பாகும்.
