ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பணி நாள்களை 150-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

2 Min Read
- Advertisement -

சென்னை, ்அக்.23 ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி நாள்களை 150-ஆக உயா்த்தியும், இதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் 125 நாள்கள் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திய குடும்பங்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 25 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையின் விவரம்:

ஒன்றிய அரசின் விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்க (ஊரகம்) சட்டம், 2025-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட கிராமப்புறக் குடும்பங்களில் ஒரு நிதியாண்டில் 125 நாள்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. நிகழாண்டு ஜூலை 1 முதல் இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான நிதியை ஒன்றிய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து வழங்குகின்றன. இந்த நிலையில், ஏற்கெனவே 125 நாள்கள் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திய குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான குடும்பங்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 25 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2026-2027-ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டிலிருந்து ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் விருதுக்கு

நவம்பர் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, அக். 23– பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காக அரிய தொண்டாற்றி வரும் ஒருவருக்கு, ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாளன்று ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

அதன்படி, 2027 ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ள விருதுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்தை, www.tn.gov.in தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் நல இயக்குநரக அலுவலகத்திலோ அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலோ நேரில் பெறலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *