சாமியார்கள் ஜாக்கிரதை பெண்களை ஏமாற்றி நூதன மோசடி!

2 Min Read
- Advertisement -

சென்னை, அக். 23- பெண்களை ஏமாற்றி நூதன மோசடியில் ஈடுபட்ட சாமியார்கள் 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண், அபிராமபுரம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தியாகராயநகரில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில், பயிற்சிக்காக சேர்ந்தேன். அங்கு பயிற்சியாளராக இருந்த ராஜ்குமார் என்பவருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர் எனக்கு காதல் வலைவீசினார். நான் அவரது வலையில் விழவில்லை. அவர் ஏற்ெகனவே திருமணமானவர் என்பதும் எனக்கு தெரியவந்தது. இத னால் அவரோடு பேசுவதை நான் நிறுத்திக் கொண்டேன். உடற்பயிற்சி கூடத்துக்கு செல்வதையும் நிறுத்தி விட்டேன்.

இந்த நிலையில், சமீபத்தில் என்னுடைய கைப்பேசியில் நபர் ஒருவர் பேசினார். அவர் தன்னை ராஜ்குமாரின் உறவினர் என்றும், அவரது மனைவி, எனது குடும்பத்தை பில்லி, சூனியம் வைத்து அழிக்கவேண்டும் என்று கூறியிருப்பதாகவும், இதற்காக என்னுடைய நிழற்படத்தையும், அதற்கான பணத்தையும் கொடுத் துள்ளார் என்றும், உனக்கு பில்லி சூனியம் வைக்காமல் இருக்க வேண்டும் என்றால் நான் கேட்கும் பணத்தையும், தங்க நகைகளையும் தரவேண்டும் என்றும் கூறினார்.

இதனால் பயந்துபோன நான், ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ஓட்டலில் அவரை சந்தித்தேன். அப்போது நான் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை வற்புறுத்தி பறித்துக் கொண்டார். இதைவெளியில் சொன்னால், உனது குடும்பத்தையே சூனியம் வைத்து நாசப்படுத்தி விடுவேன் என்றும், நான் மந்திரவாதி என்றும் மிரட்டி விட்டு சென்றார். தொடர்ந்து அந்த நபர், என்னை கைப்பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார். அவர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக் கவேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இளம்பெண் ணிடம் பேசும் கைப்பேசி எண்ணை வைத்து, கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த கணேசன் (வயது 55) என்ப வரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர் இதுபோல் பில்லி, சூனியம் வைப்பதாக மிரட்டி பலரிடம் பணம் பறித்தவர் என்பது தெரிய வந்தது.  அவருக்கும், பயிற்சியாளர் ராஜ்குமாருக்கும் தொடர்புள்ளதா? என்றும் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

ஊத்துக்கோட்டை

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை கலைஞர் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). தன்னை சாமியார் என்று கூறிக்கொண்ட இவர், ஊத்துக்கோட்டை ரெட்டி தெருவைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், உங்கள் வீடு செழிப்பாக மாறவேண்டுமானால் ஒரு சிறப்பு பூஜை செய்ய வேண்டும். அதற்கு ரூ.40 லட்சம் தேவைப்படும் என கூறினார்.

அதனை நம்பிய பெண், தனது உறவினர்களிடம் கடன் வாங்கி ரூ.28.10 லட்சத்தை பிரகாஷிடம் கொடுத்தார். ஆனால் பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் வீடு செழிப்படையவில்லை. இது குறித்து கேட்டபோது, நான் சிறப்பு பூஜைகளை செய்துவிட்டேன். இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என பிரகாஷ் அலட்சியமாக பதிலளித்தார். இதனால் பணத்தை திருப்பி கேட்டபோது தர மறுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.

இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத்திடம் புகார் மனு அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த போலி சாமியார் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *