தமிழ்நாடு மூதறிஞர் குழு நடத்திய “தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தம் 2026 – சமூகநீதிக்குச் சூழும் பேராபத்து“ அரங்கம் நிறைந்த சிறப்புக் கூட்டம்

2 Min Read
- Advertisement -

சென்னை, அக். 23- கல்வியும் சமூகநீதியும் எங்குப் பாதுகாக்கப்படுகிறதோ, அங்குதான் ஒரு சமூகத்தின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும். அந்த வகையில், இன்று கல்வித் துறையிலும் நமது உரிமையிலும் உரசலை ஏற்படுத்தும் ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தம் 2026: சமூகநீதிக்கு சூழும் பேராபத்து!’ என்ற மிக முக்கியமான பொருண்மையில் விவாதிப்பதற்காக தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் சார்பில் பெரியார் திடல், மணியம்மை அரங்கில் சிறப்புக் கூட்டம் 20.10.2026 அன்று மாலை நடத்தப் பட்டது.

தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைத் தளமாகவும், உரிமைக் குரலாகவும் விளங்கும் ‘தமிழ்நாடு மூத்தறிஞர் குழு’ நடத்தும் இந்தச் சிறப்புக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள சான்றோர்கள், கல்விச் சிந்தனையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனை வரையும் தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் இணைச் செயலாளர் பொ.நாகராஜன் வரவேற்றார்.

இந்தச் சிறப்புக் கூட்டத்திற்கு  தமிழ்நாடு மூத்தறிஞர் குழுவின் தலைவர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்.

இன்றைய சூழ்நிலை யில், கல்வியை வணிகமய மாக்குவதற்கும், சமூகநீதிக்கு எதிரான சட்டத் திருத்தங்களுக் கும் எதிராகத் தொடர்ச்சியாகக் களத்திலும் அறிவுத்தளத்திலும் குரல் கொடுத்து வரும் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொது செயலாளர் தோழர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரையாற்றினார்.

சமச்சீர் கல்வி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான தாய்மொழி வழிக் கல்வி, மாநிலங்களின் கல்வி உரிமை மற்றும் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான கடுமையான சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருபவரும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்வி உரிமைகளுக்காகவும், கல்வி வணிகமயமாவதற்கு எதிரா கவும், ஊடகங்களிலும் மக்கள் மன்றத்திலும், மிகத் தெளிவான, அழுத்தமான கருத்துகளைப் பதிவு செய்து வருபவருமான முன்னணி கல்விச் சிந்தனையாளரின் உரை ஒரு விழிப்புணர்வு உரையாக அமைந்தது.

‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தம் 2026’ எவ்வாறு சமூகநீதிக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதைப் பற்றிய விரி வான பார்வையையும், வழிகாட்டுத லையும் வழங்கிய தோழர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தின் பின்னணியில் உள்ள பேராபத்துகளையும், நாம் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் விளக்க உரையாற்றியது் சிறப்பாக அமைந்தது.

கல்வி என்பது வெறும் வணிகப் பண்டமல்ல; அது எளிய மக்களின் சமூகப் புரட்சிக் கான கருவி! அந்தச் சமூகநீதிக் கருவியைப் பாதுகாப்பதற்கான எச்சரிக்கை மணியாகவே இன்றைய சிறப்புக் கூட்டம் அமைந்தது.

கூட்டத்தின் வாயிலாகப் பெறப்பட்ட கருத்துகளும் விழிப்புணர்வும், சமூகநீதியைக் காக்கும் நமது கூட்டுப் போராட் டத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் எனத் தொகுப்புரை வழங்கிய தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் துணைத்தலைவர் தெரிவித்து கருத்துகளோடு மூதறிஞர் குழுவின் பொருளா ளர் ஆ வெங்கடேசன் நன்றியுரை யுடன் சிறப்புக் கூட்டம் இனிதே நிறைவுப் பெற்றது.

விழாவில் மூதறிஞர் குழுவின் நிர்வாகிகள் செயலாளர் முனை வர் த.கு.திவாகரன்,  தோழர்கள் எம்.ஆர்.மாணிக்கம், வேண்மாள் கோவிந்தன் நன்னன், ந.ஜெய ராஜ் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்துக் கொண் டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *