மருத்துவக் கல்வி இயக்குநராக அரவிந்த் நியமனம்

2 Min Read
- Advertisement -

சென்னை, அக். 23- மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக (டிஎம்இ) மருத்துவர் அரவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த அவர், அதிலிருந்து விலகி, நேற்று (22.10.2026) இரவே மருத்துவக் கல்வி இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மருத்துவர் அரவிந்த், எம்பிபிஎஸ் படிப்புக்குப் பிறகு எம்டி பொது மருத்துவம், டிஎம் இரைப்பை குடல் நல மருத்துவம் முடித்துள்ளார். பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை குடல் சிகிச்சை துறை இயக்குநராகவும், திருவண்ணாமலை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராகவும் இருந்துள்ளார். தொடா்ந்து கடந்த ஓராண்டுக்கு முன் அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வராக அவா் மாற்றப்பட்டார். தற்போது மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அவா், அந்தப் பொறுப்பில் ஓராண்டுக்கு நீடிப்பார்.

துணையாளர் ஒருவருடன் மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கக் கோரி

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை அக். 23- தமிழ்நாடு அரசின் `வெற்றிப் பயணம்’ பேருந்துகளில் துணையாளர் ஒருவருடன் மாற்றுத் திறனாளிகளையும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் தோ.வில் சன் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பா. ஜான்சி ராணி பங்கேற்றார். இது குறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில் சன் கூறியதாவது: எங்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மானிய கோரிக்கையின் போது, சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, “தமிழ்நாடு அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தில் பெண்கள் மற்றும் திருநர்களுடன் மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கி திட்டம் விரிவுபடுத்தப்படும்” என அறிவித்தார்.

அக்.2இல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தபோது அதில் மாற்றுத்திறனாளிகள் இணைக்கப்படாமல் விடுபட்டு இருந்தது அதிர்ச்சியாக இருந்தது.

எனவே, தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்த படி அரசின் `வெற்றிப் பயணம்’ பேருந்துகளில் துணையாளர் ஒருவருடன் மாற்றுத்திறனாளிகளையும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும். இதற் கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *