புழல் சிறையில் கைதிகள் தப்பிய விவகாரம் ஏழு அதிகாரிகள் பணி இடை நீக்கம்!

2 Min Read
- Advertisement -

சென்னை, அக். 23- சென்னை புழல் மத்திய சிறையில் 3,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு திருட்டு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட நேபாள நாட்டைச் சேர்ந்த சுதீப் போகாத்தி (23) என்ற விசாரணைக் கைதி அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 20.10.2023 அன்று அவர் சிறையில் இருந்து தப்பினார். இதையடுத்து புழல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், சுதீப் போகாத்தி அண்ணா நகரில் சுற்றித் திரிந்த போது பிடிபட்டார். அவர் சிறையில் இருந்து தப்பியது எப்படி என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

புழல் சிறையில் 40 அடி சுவரில் பதிக்கப்பட்ட சோலார் கேபிள்கள் வழியாக ஏறி கீழே குதித்ததில் அவர் மயங்கி விழுந்துள்ளார். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சுயநினைவு திரும்பி அங்கிருந்து வெளியேறி உள்ளார்.

இந்நிலையில்தான் செலவுக்குப் பணம் இல்லாமல் அண்ணா நகரில் சுற்றித் திரிந்த போது காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். இதற்கி டையே, போக்சோ வழக்கில் தண்டனை பெற்று புழல் சிறை 1இல் அடைக்கப்பட்டிருந்த சென்னை திருமங்கலத் தைச் சேர்ந்த சுரேஷ் (41) என்பவரும் அன்றைய தினம் தப்பியோடினார்.

சிறைக்கு வெளியே உள்ள அங்காடியில் பணிபுரிய அனுமதிக்கப் பட்டிருந்த அவர், கடந்த அக். 21 அன்று காலை 7 மணிக்கு பணிக்குச் சென்ற நிலையில், 10 மணியளவில் தப்பிச் சென்றார். அவரையும் தனிப்படை காவல்துறை யினர் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் குன்றத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த போது காவல்துறையினரிடம் பிடிபட்டார். தப்பிய 2 கைதிகளும் மீண்டும் சிறை யில் அடைக்கப்பட்டனர்.

கைதிகள் தப்பியோடி யது குறித்து துறைரீதியாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப் படையில், பணியில் கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் இருந்ததாக புழல் தண் டனை சிறை தலைமைக் காவலர் கண்ணதாசன், முதல்நிலை காவலர் எம்.ஆர்.மணி, இரண்டாம் நிலை வார்டர் பிரகாஷ் ஆகியோரும், புழல் விசாரணைக் கைதி சிறை உதவிக் காவலர் ஜோதிராமன், தலைமைக் காவலர் அலெக்ஸ் கிருஷ்ணராஜ், முதல்நிலை காவலர்கள் குணசேகர், ராஜேஷ் கண்ணா ஆகிய 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *