உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கப் போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து!

2 Min Read
- Advertisement -

மதுரை, அக். 23- உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

பெரியகுளத்தைச் சேர்ந்த வினோத் ராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டதாவது: தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க வலியுறுத்தி பெரியகுளத்தில் தமிழ் தேசிய மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 11.2.2024இல் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து சட்ட விரோதமாக கூடி பிளக்ஸ் பேனர் வைத்ததாகவும், காவல் துறையினரை மிரட்டியதாகவும், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், ஆர்ப் பாட்டம் நடத்த அனு மதிக்காவிட்டால் வாகனங்களுக்கு தீ வைப்பதாக மிரட்டிய தாகவும் எங்கள் மீது தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டம் ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசலோ, வன்முறை நிகழ்வுகளோ நடைபெறவில்லை. எனவே தேனி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கு ரைஞர் ஹென்றி டிபேன் வாதிடுகையில், ‘உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி நடத்தப்பட்ட இது ஒரு ஜனநாயக ரீதியிலான போராட்டமாகும். காவல் துறையில் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் பொது மக்களில் எவரும் சாட்சிகளாக விசாரிக்கப் படவில்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.

பின்னர் நீதிபதி, ‘மனு தாரரும் ஓர் அமைப்பை சேர்ந்த மற்றவர்களும் உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி சட்டவிரோதமாகக் கூடிப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கில் சாட்சிகளாகப் சேர்க்கப்பட்டுள்ள அனை வரும் காவல் துறையைச் சேர்ந்தவர்களே ஆவர்.

இந்தச் சூழலில், மனுதாரருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக் கைகளைத் தொடர்ந்து நடத்துவது சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதற்கே வழிவகுக்கும். இது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் பொருந்தும். எனவே, தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மொத்தமாக ரத்து செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *