கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.10.2026

1 Min Read
- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* சிஜேபி (CJP) தலைவர்கள் ரங்கா, தாஸ் 8 நாள் சிறைவாசத்துக்கு பின் விடுதலை! டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய சிஜேபி தலைவர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர், அமைதியைப் பேண வேண்டும் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழியுடன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை முடியும் வரை, தலா ரூ.50,000 தனிநபர் பிணையிலும் அதே தொகைக்கான உத்தரவாதத்திலும் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

* பூரி – எப்ஸ்டீன் ஒளிப்படம்: பிரதமர் மோடியின் மவுனம் ஏன்? என காங்கிரஸ் கேள்வி! அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இருக்கும் ஒளிப்படம் வெளியாகி உள்ள நிலையில், பிரதமர் மோடியின் மவுனத்தை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த விவகாரத்தில் பூரி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளும் தரப்பின் பொறுப்புணர்வு கேள்விக்குறியாகிறது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தி இந்து:

* உச்சநீதிமன்றத் தீர்ப்பு: மத அடிப்படையற்ற ஓபிசி வகைப்பாடு குறித்து புதிய விவாதம்! ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஓபிசி நபர் வேறு மதத்திற்கு மாறினால் இட ஒதுக்கீட்டுப் பலனை இழப்பார் என்ற உச்ச நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பு, ஓபிசி வகைப்பாடு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டுமா என்ற விவாதத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

* எஸ்.அய்.ஆர்.-க்கு எதிரான போராட்டம்: பரகலா பிரபாகர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்பு! வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு (SIR) எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் நாளை அக்டோபர் 23-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறுகிறது; பொருளாதார வல்லுநர் பரகலா பிரபாகர், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *