அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது பதிவான வன்கொடுமை வழக்குப் பட்டியலை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

2 Min Read
- Advertisement -

மதுரை, அக். 22- தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீது சக ஊழியர்களால் அளிக்கப்பட்ட வன்கொடுமை புகார் மற்றும் வழக்குகளின் பட்டியலைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

நெல்லை அண்ணாநகரை சேர்ந்த ஜோதி வேல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நான் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்தேன். இந்நிலையில் என்னை குவாச்சிப்பட்டி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இடமாறுதல் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் இடமாறுதல் உத்தரவு தண்டனை வழங்கும் நோக்கம் கொண்டது. அதிகார வரம்பு இல்லாத முதன்மைக் கல்வி அலுவலரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல் உத்தரவை பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர்தான் பிறப்பிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.

அரசுத் தரப்பில ஆஜரான வழக்குரைஞர், “மனுதாரருக்கும் முதன்மைக் கல்வி அலுவலருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை. மனுதாரர் தொடர்ந்து அதே பணியிடத்தில் நீடித்தால் கல்வி அலுவலரின் நிர்வாகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படும்” என வாதிட்டார். அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மனுதாரரின் இடமாற்ற உத்தரவு அதிகார வரம்பு இல்லாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருப்பதால் இடமாறுதல் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. மனுதாரர் பணியில் சேரலாம், அக்.26 வரை அவர் முதன்மைக் கல்வி அலுவலரின் தனி உதவியாளராக எந்தப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது.

தன் மீது மனுதாரரின் புகாரின் பேரில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கல்வி அலுவலர் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளதை கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. இதனால் வழக்கில் மனிதவள மேம்பாட்டுச் செயலாளரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது.

மேலும், மனிதவள மேம்பாட்டு செயலாளர், கடந்த அய்ந்து ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் அல்லது பிற பணியாளர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம், 1989இன் கீழ் எத்தனை புகார்களைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.” என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அக்.26ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *