ஏஅய் தொழில்நுட்பம் மூலம் தன்னை அவதூறாகச் சித்தரித்து காணொலி பரப்பப்படுவதாக சென்னை மேயர் பிரியா குற்றச்சாட்டு!

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 22- “தவெகவின் ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ என்று சொல்லக் கூடிய விர்ச்சுவல் அப்யூசர்ஸ், ஏஅய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்னை அவதூறாகச் சித்தரிக்கிறார்கள். இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” என சென்னை மேயர் பிரியா குற்றம்ச்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மேயர் பிரியா வெளியிட்டுள்ள காணொலிக் காட்சிப் பதிவில், “தவெக அரசு மே மாதம் முதலே மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளை ரத்து செய்திருக்கிறது. சில பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. மாநகராட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதியையும் ஒதுக்கவில்லை. இது குறித்து திமுக சார்பில் பல்வேறு இடங்களில் எங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறோம்.

எனவே, இன்றைக்கு ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ என்று சொல்லக்கூடிய விர்ச்சுவல் அப்யூசர்ஸ், சமூக வலைத் தளங்களில் என்னைத் தவறாகச் சித்தரித்து வருகிறார்கள். தவெக அரசைக் கண்டித்துப் பேசினாலும், அந்த அரசில் நடைபெறும் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சித்தாலும், அதற்கு மறுநாளே என்னைத் தவறாகச் சித்தரித்து ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’, ‘எக்ஸ்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், காட்சிப் பதிவுகளை வெளியிடுகிறார்கள்.

ஏஅய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திமுகவில் இருக்கக் கூடியவர்களுடன் என்னைத் தவறா கத் தொடர்புபடுத்தி காட்சிப் பதிவு களை வெளியிடுகிறார்கள். இந்த மாதிரியான காட்சிப் பதிவுகள் பொது மக்களிடையே பரவும்போது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும், பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், மேயராகவும் பெண்ணாகவும் நான் பலமுறை இதுகுறித்து பேசியும், இன்றுவரை முதலமைச்சர் மவுனம் காத்து வருகிறார். ஆட்சியில் இருப்பவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான் இந்தப் பதிவை வெளியிடுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *