சென்னை, அக்.22 சென்னை ‘மெட் இண்டியா’ மருத் துவமனைக்கு அமெ ரிக்கச் செரிமான மண்டல மருத்துவக் கல்லூரியின் (ACG) மதிப்புமிக்க ‘ஏசிஜி-ஸ்கோபி விருது’ (ACG-SCOPY Award) வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டுள்ளது.
‘மெட் இண்டியா’ மருத்துவமனையின் தலைவரும், செரிமான மண்டல மருத்துவ நிபுணரும், ‘சி5 ஸ்பார்க்’ திட்டத்தின் இயக்குநருமான மருத்துவர் டி.எஸ். சந்திரசேகர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
‘மெட் இண்டியா’ மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட ‘சென்னை பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்’ (Chennai Colon Cancer Community Chat – C5 Spark) என்ற சிறப்பு விழிப் புணர்வுப் பரப்புரைக்காக இந்த விருது கிடைத்துள்ளது. பன்னாட் டளவில் 8,000-க்கும் மேற்பட்ட செரிமான மண்டல மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று அமெரிக்காவின் நாஷ்வில் நகரில் நடைபெற்ற ‘ஏசிஜி-யின் உலகளாவிய மாநாட்டில்’ இவ்விருது வழங்கப்பட்டது.
திட்டத்தின் நோக்கம்
பொதுமக்களுக்குப் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், இந்நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவதுமே ‘சி5 ஸ்பார்க்’ முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.
