தமிழ்நாடு காவல்துறையின் கொடிநாள் வில்லையில் தமிழ் புறக்கணிப்பு : தி.மு.க. சாடல்

1 Min Read
- Advertisement -

சென்னை, அக்.22 தமிழ்நாடு காவல் துறையில் தமிழுக்கே இடமில்லையா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

காவல்துறை கொடி நாளின் போது, தமிழ்நாடு காவலர்கள் தங்கள் சீருடையில் அணியும் சிறப்பு வில்லையில் தமிழ்மொழி புறக்கணிக் கப்பட்டு, ஹிந்தியும் ஆங்கிலமும் இடம்பெற்றிருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து திமுக தனது அதிகாரப் பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழும் ஆங்கிலமும்தான் தமிழ் நாட்டின் இருமொழிக் கொள்கை. தவெக ஆட்சியில் அது “ஹிந்தியும் ஆங்கிலமும்” என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா?

காவல் துறை கொடி நாளில், ஹிந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள வில்லை–-யை தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன்?

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? காவல் துறை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறை என்பதை, அந்தத் துறையைத் தனது நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் அறிவாரா? அல்லது மாநிலத்தின் மொழி உரிமையோடு சேர்த்து, காவல்துறை மீதான தனது அரசியல் பொறுப்பையும் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்து சரணடைந்துவிட்டாரா?

தமிழ்நாட்டில் தமிழ் கேட்பது கூட இன்று ஒரு கேள்வியாக வேண்டிய நிலை வந்திருப்பதே வேதனை.

குறிப்பு: பல ஆண்டுகளாக மத்திய அரசு அழுத்தத்தை கொடுத்த நிலையில் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது. இன்றைய அரசுக்கு முதுகெலும்பு ஏது! என்று திமுக குறிப்பிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *