ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு
உடல்நலமில்லை;
‘பார்த்துவந்தேன்’ என்று
பதிவிட்டிருந்தார்
முன்னாள் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்கள் –
அவரையே அழைத்து
ஆசிரியர் நலம்குறித்து விசாரித்தேன்
‘அச்சப்படும்படி ஏதுமில்லை’
ஆறுதல் சொன்னார் தளபதி
ஆனால்,
அன்புகொண்ட மனம்
அடங்கவில்லை
நேற்றுமுற்பகல்
ஆசிரியர் இல்லம்சென்று
அவரைச் சந்தித்தேன்
என்ன ஆச்சரியம்!
படுக்கையில் இருப்பார்
என்று பார்த்தால்
படைவீரன்போல்
நடந்துவந்தார்
எதையும் மறவாத
‘ChatGPT’ மூளை
அவருடையது
முத்துமணிச் சொற்களின்
தத்துவச் சொல்லாடல்
அவருடையது
வயிற்றில் தொப்பையும்
முதுகில் கூனும் இல்லாதவர்க்கு
வாழ்நாள் அதிகம்!
நூறாண்டு வாழ்க
என்று சொன்னால்,
அவருக்குக் கோபம்வரும்
‘வாழ்த்துவதில்
என்ன சிக்கனம்’ என்பார்!
“உங்கள்
உடலுக்கு வயது 94;
மனதுக்கு வயது 34.
வாழ்க நெடுங்காலம்” என்று
வாழ்த்தி விடைகொண்டேன்!
– கவிப்பேரரசு வைரமுத்து
