விழுப்புரம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மகிழ்வாக கொள்கைக் குடும்பங்களின் ஒன்றுகூடல் நடத்த முடிவு

- Advertisement -

விழுப்புரம், அக்.19 விழுப்புரம் மாவட்டக்  கழகக் கலந்து ரையாடல் கூட்டம் 18.10.2026 அன்று வளவனூர் பவுணு மணி இல்லத்தில் காலை 10 மணியளவில் விழுப்புரம் மாவட்டத் தலைவர் அரங்க.பரணிதரன் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் வளவனூர்
சு. மாறன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் மாவட்டக் கழகr் செயலாளர் ஏ.ரமேஷ், மாவட்டக் கழகக் காப்பாளர்கள் கொ.பூங்கான், சே.வ.கோபன்னா, மாவட்டத் துணைத் தலைவர் அ.சதீஷ், பொதுக்  குழு உறுப்பினர் கி.கார்வண்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் க. கவுதமன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்கள்.

திராவிடர் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், அடுத்தக் கட்ட செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிச் சிறப்புரையாற்றினார்.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், இணைச் செயலாளர் மு.இளமாறன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில் ப.க. தோழர் த.பகவான்தாஸ், விழுப்புரம் நகரச் செயலாளர் ச.பழனிவேல், கோலியனூர் ஒன்றியத் தலைவர் இரா.சிவராமன், கோலியனூர் ஒன்றிய செயலாளர் வி.ராதாமணவாளன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ப.மணிராஜ், சென்னக் குணம் எஸ்.தண்டபாணி, வி.சுந்தர மூர்த்தி, கெடார் செயராமன், தஞ்சை தெற்கு ஒன்றிய செய லாளர் அ.இராமலிங்கம், திராவிட மாணவர் கழகத் தோழர்கள் கா.அச்சுதன், கொ.கவியரசன், ப.சுசிவ்தானு, ஜோ.ராஜு, கு.நித்திஷ் குமார், ம.திருமுருகன், சீ.சிவன்ராஜன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

இரங்கல் தீர்மானம் – மாவட்ட இணைச் செயலாளர் வளவனூர் மாறனின் தம்பி ஓவிய ஆசிரியர் இராஜேந்திரன், பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் பகவான்தாஸ் அவர்களின் அண்ணன் வரதராஜன் ஆகியோரது இறப்பிற்குக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

அறிவாசன் தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு  பிறந்த நாள் மகிழ்வாக கொள்கை குடும்பங்களின் ஒன்று கூடல் விழாவினை வளவனூரில் நவம்பர் 29 இல் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – பட ஊர்வலம் தெருமுனைக் கூட்டத்தை நவம்பர் ஒன்றாம் தேதி கண்டாசிபுரத்தில் எழுச்சியோடு நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஏற்று ‘‘பெரியார் கேட்கும் கேள்விகள்’’ புத்தகத்தை அனைத்து கிளைக் கழகங்களிலும் பரப்புவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை திராவிட மாணவர் கழகம் சார்பில் வருகின்ற நவம்பர் 15 அன்று சிறப்புக் கூட்டமாக சேந்தநாட்டில் எழுச்சியோடு நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து ஓய்வின்றி உழைத்து வரும் தமிழர் தலைவர்,  ஆசிரியர் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நன்றி பெருக்கு விழாவாக கொண்டாடி மகிழ்வோம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் மகிழ்வாக ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ சந்தாக்களை சேர்த்தளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

பேராசான் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு செஞ்சியில் நினைவு நாள் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தமிழர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு, தை முதல் நாள் பொங்கல் விழாவினை வளவனூரில் எழுச்சியோடு நடத்துவது எனவும், சிறப்புரையாற்ற தமிழர் தலைவர் அவர்களை தேதியளிக்குமாறு இக்கூட்டம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

விழுப்புரம் மாவட்டக் கழகத்திற்கு புதிய பொறுப்பாளர்களை நிய மித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியையும், புதியப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டையும், வாழ்த்துகளையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன. விழுப்புரம் மாவட்ட புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி மாவட்ட கழக காப்பாளர் சே.வ.கோபண்ணா பயனாடை அணிவித்து சிறப்பித்தார். மாவட்ட இணைச் செயலாளர் வளவனூர் சு. மாறன் இல்லத்தில் அனைவருக்கும் மதிய உணவு பிரியாணி வழங்கி சிறப்பித்தார். கூட்டத்தின் இறுதியில் திராவிட மாணவர் கழகத் தோழர் ய.இன்பத்தமிழன் நன்றி உரை யாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *