புதுடில்லி, அக்.19 இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு (SIR) எதிராக டில்லியில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நிறுவனத் தலைவர் அபிஜித் தீப்கே அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள எங்கள் அமைப்பின் உறுப்பினர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் விடுவிக்கப்பட்ட பிறகு, அனைவரும் கூடி அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். நாங்கள் யாருக்கும் அஞ்ச மாட்டோம்; பின்வாங்கவும் மாட்டோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
