டில்லி ‘ராம் லீலா’ பண்டிகையில் 30 அடி உள்ள கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிக்க முடிவு!

- Advertisement -

புதுடில்லி, அக்.19 டில்லி யில், தசரா முடிந்த அடுத்த நாளன்று ’ராம் லீலா’ நிகழ்ச்சி நடை பெறும். இதில், ராமனுக்கு எதிரியான ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் ஆகி யோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவது வழக்கமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு நவராத்திரி முடிந்து அடுத்தநாளான ‘விஜய தசமி’ அன்று ராம் லீலா கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பீதாம்பூரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 30 அடி உயரம் கொண்ட கரப்பான் பூச்சி உருவ பொம்மையும் எரிக்க இருப்பதாக விழா ஏற்பாட் டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, இந்த ஆண்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் சிறீ கேசவ் ராம் லீலா கமிட்டி, ”இந்த உருவ (கரப்பான்) பொம்மையானது அசுத்தம் மற்றும் அழுக்கைக் குறிப்பதாகவும், ‘ஸ்வச் பாரத்’ (தூய்மையான இந்தியா) மற்றும் ஸ்வச் டில்லி (தூய்மையான டில்லி) ஆகிய பிரச்சாரங்களின் கீழ் தூய்மையை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது” எனத் தெரிவித்துள்ளது.

’கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’யானது (சிஜேபி) முன்னதாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. இதன் விளைவாக, அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதராவாக செயல்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, அவர் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஆளும் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமைத்துள்ளதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், ராம் லீலா நிகழ்ச்சியில் கரப்பான் பூச்சியின் உருவ பொம்மை எரிக்கப்படுவது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *