ஆவடி, அக் 19- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று (18-10-2026) மாலை 5.30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் பெரியார் பிஞ்சு மொழிச்சுடர் அபிரன் கடவுள் மறுப்புக் கூற, மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் வர வேற்புரையாற்றினார்.
மாவட்ட கழக தலை வர் வெ.கார்வேந்தன் தலை மையுரையில் 27-09-2026 அன்று திருவள்ளூரில் நடைபெற்ற பெரியார் நடைப்பயணத்திலும் 02-10-2026 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற குடும்ப விழாவிலும் கலந்து கொண்ட ஆவடி மாவட்ட கழகத் தோழர்கள் அனை வருக்கும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.
அடுத்து டிசம்பர் 02 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகம் சார்பாக 94 விடுதலை சந்தா வழங்க முடிவெடுத்திருப்பதால் மாவட்ட கழக அனைத்து அணித் தோழர்களும் சந்தா சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு நவம்பர் 25ஆம் தேதிக்குள் மாவட்ட கழகத்திடம் சந்தாக்களை ஒப்படைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.தொடர்ந்து பெரியார் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது பத்து புத்தகங்கள் வாங்கி மற்றவர்களுக்கு வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
மாவட்ட கழகத் தலைவரின் வேண்டுகோளை வலியுறுத்தி துணைத் தலைவர் மு.ரகுபதி, ஆவடி நகர கழகத் தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, பட்டாபிராம் நகர கழக தலைவர் இரா.வேல்முருகன், அம்பத்தூர் நகர கழக தலைவர் பூ.இராமலிங்கம், செயலாளர் அய்.சரவணன், திருமுல்லைவாயல் நகர கழக தலைவர் இரணியன், மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேசன், துணைச்செயலாளர் சென்ன கிருட்டிணன், மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி, திருநின்றவூர் நகர கழக இளைஞரணி அமைப்பாளர் மா.சிலம்பரசன், பூந்தமல்லி நகர கழக செயலாளர் தி.மணிமாறன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் வே.பன் னீர்செல்வம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் சீ.ஜெயராமன், ஆவடி சுந்தர்ராஜன், மதுரவாயல் பிரகாஷ் மாணவர் கழக ஆதிதமிழச்சி, வை.கலையரசன் கன்னடபாளையம் தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம் சிறப்புரையில் மாவட்ட கழகத் தோழர்கள் களப்பணி குறித்தும், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் வழிகாட்டி உரையாக எழுச்சியுரை ஆற்றிய பின்பு அக்டோபர் மாதம் பிறந்த நாள் மற்றும் இணையேற்பு நாள் கண்ட கழகத் தோழர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். தொடர்ந்து பெரியார் நடைப் பயணத்தில் பங்கேற்றத் தோழர் களுக்கு பாராட்டு சான்றிதழும் பெரியார் பதக்கமும் அணி வித்தார்.
திருநின்றவூர் நகர கழகச் செயலாளர் கீதாராமதுரை, ஆவடி நகர கழக துணைத் தலைவர் சி.வச்சிரவேல், பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், பட்டரவாக்கம் ரவிச்சந்திரன், திருவேற்காடு இளைஞரணி தோழர் சு.மாறன், வெற்றி, உ.விஜய், பெரியார் பிஞ்சு இனியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
80ஆவது பிறந்த நாள் கண்ட பெரியார் பெருந்தொண்டர்கள் பட்டாபிராம் நகர கழகத் தலைவர் இரா.வேல்முருகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் சீ.ஜெயராமன் ஆகியோருக்கு கரவொலி மூலம் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக மாவட்ட கழக துணைச்செயலாளர் க.தமிழ்ச்செல்வன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
