
தஞ்சாவூர், அக். 19- திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அறிவிக்கப்பட்ட தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்வில் ஒன்றான பெரியார் கேட்கும் கேள்விகள் புத்தகம் பொதுமக்களிடம் பரப்பும் பணி 4.10.2026 அன்று மாலை 5 மணி அளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியம் குறிஞ்சி தெரு, ஆர். ஆர்.நகர் பகுதிகளில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன் தலைமையில் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநகர தலைவர் செ. தமிழ்ச்செல்வன், மாநகர செயலாளர் இரா. வீரக்குமார்,தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ. ராமலிங்கம், பூதலூர் ஒன்றிய செயலாளர் அல்லூர் இரா.பாலு, புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் வெ.துரை, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி. என். குனசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற புத்தகம் பரப்புரை நிகழ்வை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் செவிலியர் மலர்கொடி முதல் பிரதிகளை பெற்றுக் கொண்டார். நிகழ்வில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் பேராசிரியர் ந.எழிலரசன், பாக்கியம் ஏகாம்பரம், வல்லம் நகரத் தலைவர் ம.அழகிரி,பெரியார் பெருந்தொண்டர் வல்லம் மணியன், மாவட்ட துணைச் செயலாளர் கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன், பெரியார் சமூக காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி, பூதலூர் ஒன்றிய துணைச் செயலாளர் ப.விஜயகுமார், வடசேரி குப்புசாமி, குருமூர்த்தி உள்ளிட்ட கழகத்தோழர்கள் புத்தகம் பரப்பும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை நன்கொடை கொடுத்து பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புத்தகம் பரப்பும் பணியைத் தொடங்கினர்.
