விசாரணையை மேற்கொள்பவர்களே தவறு செய்தால் விசாரணை எந்த அளவிற்கு இருக்கும்? இறந்து போன நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அபராதம் விதித்த வருவாய்த்துறை!

- Advertisement -

நாமக்கல், அக். 19– நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்து 9 மாதங்கள் ஆன நிலையில், அவர் நேரில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறி மாவட்ட வருவாய் அலுவலர் அபராதம் விதித்து உத்தரவிட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கலைமகள் வீதியைச் சேர்ந்தவர் பழனி வேல். இவரது மனைவி செல்வாம்பாள். இவர்களது மகன் அரவிந்தன் (29), ஈரோட்டில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2025 அக்டோபர் 1ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் அரவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு, உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான இறப்புச் சான்றிதழும் 2025 அக்டோபர் 23ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

மகனைப் பறிகொடுத்து சோகத்தில் வாழ்ந்து வந்த பழனிவேல் இணையர் களுக்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமாரிடமிருந்து அஞ்சல் மூலம் ஓர் உத்தரவு நகல் வந்தது. அதை வாங்கிப் படித்த பெற்றோருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை பழனிவேல் பணியாற்றி வந்த உணவகத்தில் திடீர் சோதனை நடத்தி அங்கு வணிகப் பயன்பாட்டிற்குப் பதிலாக, மானிய விலையிலான வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு உருளை யைப் பயன்படுத்தியதால் உருளையைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவில், 2026 ஜூன் 15ஆம் தேதி ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் முன்பாக அரவிந்தன் நேரில் ஆஜராகி: வீட்டு உபயோகச் உருளையைப் வணிகத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்பது தனக்குத் தெரியாது எனக் கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், தன்னை மன்னித்து வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரே நேரில் வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ரூ.2,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்து 9 மாதங்கள் ஆன நிலையில், இறந்துபோன நபர் 5 மாதங் களுக்கு முன்பு அதிகாரி முன் நேரில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

விசாரணை அமைப்புகளே இப்படி தவறு செய்தால் இவர்களின் விசாரணை முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *