பொங்கல் பரிசுத் திட்டம்: நெசவாளர்களுக்கு ரூ.13.66 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

- Advertisement -

சென்னை, அக். 18- தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலைகளை புதிய வடிவமைப்புகள் மற்றும் மேம்படுத்தப் பட்ட தரத்துடன் தயாரிப்பதற்காக, நெசவாளர்களுக்கு ரூ.13.66 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வரவிருக்கும் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பொது மக்கள் விரும்பி உடுத்தும் விதமாக புதிய ரக வேட்டி, சேலைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மேலும், வேட்டிகள் 2 மீட்டர் நீளத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, சலவை செய்யப்பட்ட நிலையில் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

ஆகஸ்ட் 2026 முதல் டிசம்பர் 2026 வரையிலான காலகட்டத்தில் இத்தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கூலி உயர்வுக்கான காரணம்

புதிய வடிவமைப்புகள், நூல் கலவைகள் மற்றும் தற்போதைய விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நெசவுக் கூலியை உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை ஆராய அமைக்கப் பட்ட சிறப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் நிதி அனுமதி

பெடல்தறி மற்றும் விசைத்தறி வேட்டி, சேலைகள் மற்றும் அதற்கான முந்தைய தயாரிப்புப் பணிகளுக்கான கூலி உயர்த்தப்பட்டுள்ளது. இதற் காகத் தேவைப்படும் கூடுதல் தொகையான ரூ.13.66 கோடியை, 2026-27ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து செலவிட கைத்தறி இயக்குநருக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த அரசாணையால் பொங்கல் வேட்டி, சேலை தயாரிப்பில் ஈடுபட் டுள்ள பல்லாயிரக்கணக்கான நெச வாளர்களின் வாழ்வாதாரமும், பொரு ளாதார நிலையும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *