வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவம்பர் 12ஆம் தேதி தொடங்குகிறது!

- Advertisement -

சென்னை, அக். 18- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவம்பர் 12ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு தொடங்க உள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் (எஸ்.அய்.ஆர்.) கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றன. அதன்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு அதன் அடிப்படையில் கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

அடுத்ததாக, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் (எஸ்.எஸ்.ஆர்.) தொடங்கப்பட உள்ளன. 1.1.2027 தேதியை வாக்காளராக தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன.

அதன்படி, வாக்குச் சாவடி களை திருத்தியமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் பணிகள் வரும் நவம்பர் 2ஆம் தேதி முடியும். ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்படும்.

பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றுக்காக டிசம்பர் 11ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 28ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும். அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பிப்பதற்காக அளிக்கப்பட்ட காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

சான்றுகள்

அலுவலக வேலை நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். சிறப்பு முகாம் நடத்தப்படும் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத் துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முகவரிச் சான்றாக அங்கீகரிக்கப் பட்ட 7 ஆவணங்களில் ஒன்றின் நகலை அளிக்கலாம்.

அதன்படி, முகவரிச் சான்றாக அங்கீகரிக்கப்பட்ட 7 ஆவணங்களில் ஒன்றின் நகலை அளிக்கலாம்.

* முகவரிக்கான நீர் அல்லது மின்சாரம் அல்லது எரிவாயு இணைப்பு ரசீது (குறைந்தது 1 ஆண்டுக்கானது)

* ஆதார் அட்டை

* வங்கி அல்லது அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகம்

* இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)

* விவசாயி புத்தகம் உள்பட வருவாய்த் துறைகளின் நில உரிமைப் பதிவுகள்

* பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம் (குத்தகைதாரராக இருந்தால்)

* பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் (சொந்த வீட்டில் வசிப்பவர் என்றால்)

வயதிற்கு 6 சான்றிதழ்கள்

வயதுச் சான்றாக சுய சான் றொப்பமிட்ட 6 ஆவணங்களில் ஒன்றின் நகலை அளிக்கலாம். அதன்படி,

* பிறப்பு சான்றிதழ்

* ஆதார் அட்டை

* பான் அட்டை

* ஓட்டுநர் உரிமம்

* 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் (அதில் பிறந்த தேதி இருந்தால்)

* இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)

பெயர் சேர்க்க படிவம் 6

https://voterportal.eci.gov.in மற்றும் “ECINET” இணைய வழி முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6இல் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டு வாழ் வாக்காளர்களுக்கு!

வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும் அல்லது வாக்காளர் பதிவு அலுவலருக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.

இடமாற்றம் அல்லது வாக் காளரின் விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது இடம் பெயர்தல், திருத்தம், வாக்காளர் ஒளிப்பட அடையாள அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று புகைப்பட அடையாள அட்டை பெற வேண்டியிருந்தாலோ படிவம் 8இல் விண்ணப்பிக்க வேண்டும்.

என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *