பெரியார் கண்ட புதுமைச் சமுதாயம்!

- Advertisement -

கேள்வி கேட்கும் சிந்தனையில்
காலம் புதிதாய்ப் பிறந்திடுமே!
காரணம் தேடும் அறிவினிலே
கட்டிய இருளும் விலகிடுமே!

சாதியின் சுவர்கள் சரிந்திடட்டும்!
சமத்துவப் பூக்கள் மலர்ந்திடட்டும்!
பிறப்பால் உயர்வு தாழ்வில்லை எனும்
பெரியார் சிந்தனை நிலைத்திடட்டும்!

பெண்ணின் உரிமை உயர்ந்திடட்டும்!
பெண்ணடிமை முற்றும் மறைந்திடட்டும்!
கல்வியும் சுதந்திரச் சிந்தனையும்
காலமெல்லாம் துணையாய் விளங்கிடட்டும்!

மூடநம்பிக்கையை விலக்கிடுவோம்!
முன்னேற்றப் பாதையில் நடந்திடுவோம்!
எதையும் ஆராய்ந்து ஏற்கின்ற
எழுச்சிமிகு மனிதராய் வளர்ந்திடுவோம்!

சுயமரியாதை நம் உயிராகட்டும்!
சமத்துவம் நம் செயலாகட்டும்!
மனிதநேயம் நம் வழியாகட்டும்!
மாற்றத்தை உருவாக்கும் சிந்தனை
மக்கள் மனதில் விதையாகட்டும்!

பெரியார் ஒரு பெயரல்ல
— அது பகுத்தறிவின் குரல்!
பெரியார் ஒரு வரலாறல்ல
— அது சமூக மாற்றத்தின் பாதை!
பெரியார் ஒரு தனிமனிதரல்ல
— சுயமரியாதையுடன் வாழத் தூண்டும் சிந்தனை!

– பா.நூருல்லாஹ்,

 முதுகலை பட்டதாரி ஆசிரியர்,
 அல் அமீன் மேல்நிலைப்பள்ளி,
 கே.புதூர், மதுரை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *