தொகுப்பு: தொகுப்பு: தஞ்சை. இரா. ஜெயக்குமார்

அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட கழகச் சார்பில் பெரியார் கொள்கை குடும்பங்களின் ஒன்று கூடல் குடும்ப விருந்து நிகழ்ச்சி 11.10.2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோவை சுந்தராபுரம் குறிச்சி கல்லுக்குளம் வீதி சரஸ்வதி சிற்றரங்கத்தில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தொடங்கிய பெரியார் கொள்கைக் குடும்பங்களின் குடும்ப விழா நிகழ்வில் அனைவரையும் வரவேற்று மாவட்ட கழகச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் உரையாற்றினார். நிகழ்விற்கு மாவட்ட கழகத் தலைவர் ம.சந்திரசேகர் தலைமை ஏற்று உரையாற்றினார்.
தந்தை பெரியார் கொள்கையால் விழைந்த மாற்றங்களை குறித்து கழக சொற்பொழிவாளர் கோவை மாநகரச் செயலாளர் புலியகுளம் க. வீரமணி தொடக்க உரையாற்றினார். திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் குடும்ப விழா நிகழ்வைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். திமுக பொறுப்பாளர்கள் முகமது ஜின்னா, ராஜு, திமுக 100ஆம் வார்டு செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
கழக மகளிரணி மாவட்டத் தலைவர் முத்துமணி, மாவட்ட மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை ஏற்று தந்தை பெரியார் கொள்கையை ஏற்றதால் பொது வாழ்விலும் குடும்ப வாழ்க்கையிலும் எப்படி மகிழ்வாக வாழ்கிறோம் என கருத்துகளை எடுத்துரைத்தனர்.
தனலட்சுமி செந்தில்நாதன், திலகமணி சந்திரசேகர், கயல்விழி கிருஷ்ணமூர்த்தி, கீதா,கருணாஹரிகராம், கவுசல்யா, பெரியார் பெருந்தொண்டர் நீலகிரி, ராஜேஸ்வரி சிற்றரசு, கவிதா தமிழ்முரசு, மகேஸ்வரி ஆனந்த், சுஜிதா கார்த்திகேயன், நாகமணிராஜா, மாணவர் ராகுல்ராம், வெள்ளலூர் திருநாவுக்கரசு, அகல்யா கவுதமன், ரா.சிபிரபாகரன், கி.திராவிட எழில், கார்த்திகேயன், தோழர் சண்முகசுந்தரம், பொள்ளாட்சி நாகராஜ்,எட்டிமடை மருதமுத்து, பவித்ரா ஆட்டோ சக்திவேல் மகன் பிரபாகரன், வெள்ளலூர் விக்னேஷ், மணிமேகலை நீலகிரி, தேன்மொழி, தேவகி காமராஜ், வெள்ளலூர் ஜீவிதா உள்ளிட்டோர் பெரியார் கொள்கையை வாழ்க்கையில் ஏற்றதால் எந்த வித மூடநம்பிக்கையும் இல்லாமல் எந்த இடத்திலும் எதையும் சமாளிக்க கூடிய சிறப்பான வாழ்க்கையை எப்படி வாழ முடிகிறது குழந்தைகளையும் பகுத்தறிவு உள்ளவர்களாக கல்வியாளர்களாக எப்படி உருவாக்கினோம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலால் இன்றும் நாங்கள் சிறப்பாக வாழ முடிகிறது என எடுத்துக் கூறினர்.
பெரியார் பிஞ்சுகளின் கவிதை
பெரியார் பிஞ்சுகள் இதழிகா, மைதிலி அபிநயா, இ.புகழினி ஆகியோர் தந்தை பெரியாரைப் பற்றியான கவிதைகளை மழலை மொழியில் வாசித்தனர்.
மதிய விருந்து
குடும்ப விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதியம் இறைச்சி உணவு வழங்கினர்.
பாடல்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், மாவட்டச் செயலாளர் பிரபாகரன், போத்தனூர் கணேசன், ஒரத்தநாடு அ.உத்தரா வதி, தஞ்சை மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், ஆகியோர் கொள்கைப் பாடல்களை பாடினர்.
சிலம்பம், கராத்தே, யோகா
கவுசல்யா, வெற்றி, கனிஷ்கா ஆகியோர் கராத்தே மற்றும் சிலம்பம் நிகழ்வுகளையும், ரமேஷ் பாபு மற்றும் மாணவர்கள் தன்வீகா, யோகசிறீ, நித்திஷா யோகாவை மிகத் திறமையாக செய்து காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
நடனம்
வெள்ளவனூர் தன்சிறீ உள்ளிட்ட மாணவிகள் பாடல்களுக்கு நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர்
ஓவியம்
குழந்தைகள் ஆ. அமுதிகா. பி. ஹெலன் ஆன்ட்ரியா ஆகியோர் தான் வரைந்த ஓவியங்களை அனைவருக்கும் காண்பித்து அதற்கான விளக்கங்களை தெரிவித்தனர்

விளையாட்டு நிகழ்வுகள்
குழந்தைகள், மாணவர்கள், மகளிர் ஆண்கள், என நான்கு பிரிவுகளாக பிரித்து இசையும் நாற்காலிப் போட்டி நடத்தப்பட்டது. வருகை தந்த அனைவரும் இசை நாற்காலிப் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
லெமன்ஸ்பூன், பலூன் ஊதி வெடிக்க செய்தல், நீர்ப் பந்து உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகள் மாணவர்களுக்கும் மகளிருக்கும் நடத்தப்பட்டன அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
கழக ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார் உரை
இரா.ஜெயக்குமார் உரை
பெரியார் கொள்கை ஏற்றால் வாழ்க்கையில் லாபமா? நட்டமா?
திராவிடர் கழகத்தில் பயணிப்பதால் தந்தை பெரியார் கொள்கையை வாழ்க்கையில் ஏற்று நடப்பதால் என்ன லாபம் என்று பல பேர் கேட்கிறார்கள் அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டிய பதில் பெரியார் கொள்கையை முழுமையாக வாழ்க்கையில் ஏற்று வாழ்விகளாக கடைப்பிடித்தால் பொருளாதார ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் வாழ்க்கையிலும் நிறைய லாபம் கிடைக்கிறது என நாம் சொல்ல வேண்டும்.
பரிசளிப்பு நிகழ்வு
விளையாட்டுப் போட்டிகள் பங்கேற்ற பெரியார் பிஞ்சுகள் மாணவர்கள் இளைஞர்கள், பெரியார் பெருந்தொண்டார்கள் வாழ்வியல் உரையை பகிர்ந்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்
11-10-2026 பிறந்த நாள் கண்ட வெள்ளலூர் கவுசல்யா அவர்களுக்கு பயனடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது
குடும்ப விழாவை மிகச் சிறப்பாக நடத்திய மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் ஆ.பிரபாகரன், ஒத்துழைத்த – பங்கேற்ற பெரியார் பெருந்தொண்டர் நீலகிரி, திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன்,திமுக பொறுப்பாளர்கள் மகாலிங்கம், ராஜு, முகமதுஜின்னா,கவி கிருஷ்ணன், ஆகியோருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்
வாழ்வியல் பகிர்வுரை ஆற்றிய
மகளிருக்கு சிறப்பு செய்தல்
மகளிருக்கு சிறப்பு செய்தல்
குடும்ப விழாவில் ஆர்வமுடன் குடும்பத்துடன் பங்கேற்று வாழ்வியல் பகிர்வுகளை மேடையில் ஆர்வமாக வந்து தெரிவித்த மகளிரணித் தோழியர்கள் அனைவருக்கும் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்
திராவிடர் கழக கோவை மாநகரத் தலைவர் தி.க.செந்தில்நாதன் நன்றி கூறினார்.
மாவட்ட ப.க தலைவர் சின்னச்சாமி, மாவட்ட ப.க செயலாளர் அக்ரிநாகராஜ், மாவட்ட துணைத் தலைவர் பழ. அன்பரசு, மாவட்டச் செயலாளர் தொழிலாளர்அணி வெங்கடாச்சலம், மாவட்ட இளைஞரணித் தலைவர் திராவிடராசா, உள்ளாட்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்த்தி பொள்ளாச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பிரவீன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் சூசை ராஜ் ,பகுதி செயலாளர்கள் ஆட்டோ சக்தி, திராவிட மணி , ராஜசேகர், கவி கிருஷ்னன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் கவுதமன், ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், போத்தனூர் கணேசன், சரவணம்பட்டி அ. உத்ராபதி, தஞ்சை மாநகர துணைச் செயலாளர் இரா. இளவரசன், ஆனைகட்டி சம்பத், வேலாண்டிபாளையம் பிரபு, வெற்றிச்செல்வன், முத்து கணேஷ், தமிழ் முரசு, ரா.சி.பிரபாகரன், நியூட்டன், ராஜா உள்ளிட்ட பெரியார் பெருந்தொண்டர்கள் பெரியார் பற்றாளர்கள் திமுக நண்பர்கள் பெரியார் பிஞ்சுகள் இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் என தலைமுறை இடைவெளி இல்லாமல் இந்நிகழ்வில் பங்கேற்று உறவாடி மகிழ்ந்தனர்.
