முதுநிலை மருத்துவம் படித்தவர்களுக்கு கலந்தாய்வு இன்றி வழங்கிய பணி ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம்

- Advertisement -

சென்னை, அக். 14- நடப்பாண்டில் முதுகலைப் படிப்பு முடித்த மருத்துவர்களுக்கு கலந்தாய்வு இல்லாமல் வழங்கப்பட்ட பணி ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டம் காணொலியில் நடந்தது. சங்க நிர்வாகிகள், நடப்பாண்டு பட்டமேற் படிப்பு முடித்த, முடிக்கவிருக்கும் அரசு மருத்துவர்கள் (சர்வீஸ் பிஜி) கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு: நடப்பாண்டில் பட்டமேற்படிப்பு முடிக்கும் (ஜூலை முதல் தற்போது வரையில்) அரசு சேவை மருத்துவர்களுக்கு கலந்தாய்வு இல்லாமல் பணி ஆணை வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தற்காலிக அல்லது நிரந்தரப் பணி மாறுதல் ஆணை எதுவாக இருப்பினும் அது வெளிப்படையான கலந்தாய் வின் மூலமே நடத்த வேண்டும். பணி மூப்பு பெற்றவர்களுக்கு மருத்துவக் கல்வித் துறையில் பணியிடங்கள் வழங்காமல், பணி இளையோருக்கு வழங்குவது எதிர்கால சிக்கல்களை உருவாக்கிடும்.

மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதும் தற்போதைய நிலைக்கு ஒரு காரணியாக உள்ளது. இதுபோன்ற நிர்வாக தவறுகளால், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.

கலந்தாய்வு இல்லாமல் வழங்கப்பட்ட ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கலந்தாய்வின் மூலமே தற்காலிக அல்லது நிரந்தர பணி ஆணைகளை பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *