சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் இருவர் நியமனம்!

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 14- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 2 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தர விட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து 66 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.

9 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வரும் டி.லிங்கேஸ்வரன் மற்றும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் பி.கார்த்திகேயன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் விரைவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *