ஏஅய்டியுசி சார்பில் தொழிலாளர் உரிமையை உறுதிசெய்ய டிசம்பர் முதல் தொடர் போராட்டங்கள் அறிவிப்பு!

1 Min Read

ஓசூர், அக். 12- தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையைப் பாதுகாக்க டிசம்பர் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என ஏஅய்டியுசி அகில இந்திய பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர் தெரிவித்துள்ளார்.

ஓசூரில் ஏஅய்டியுசியின் 21ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்துவது, வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைச் செய்ய முயல்வது போன்ற செயல்களால் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையர் நியமனத் தேர்வுக் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை நியமித்ததன் மூலம் தேர்தல் ஆணையம் கைப்பாவையாக மாற்றப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத பாஜக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. டில்லியில் போராட்டங்களைத் தடுக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் சேவைகளை நிறுத்துவது, ரயில்களை ரத்து செய்வது, போராட்டக் காரர்களைக் கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.

தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்ற பெயரில், கல்வி, சுகாதாரம், மனிதவளக் குறியீடுகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தென் மாநிலங்களின் மக்களவைப் பிரதி நிதித்துவத்தைக் குறைத்துத் தண்டிக்க ஒன்றிய அரசு திட்டமிடுகிறது. இதற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பன்னாட்டு நீதிமன்றமும் அரசியல மைப்புச் சட்டமும் உறுதி செய்துள்ள தொழிலாளர் களின் வேலைநிறுத்த உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி, டிசம்பர் முதல் நாடு தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்களையும், தொடர் மறியல் போராட்டங்களையும் விவசாய சங்கங்களுடன் இணைந்து முன்னெடுக்க ஒன்றியத் தொழிற்சங்கங்கள் திட்ட மிட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *