முறைகேடுகளைத் தடுக்க வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துங்கள் : பிரேமலதா வலியுறுத்தல்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கடலூர், அக்.11 தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் எம்எல்ஏவுமான பிரேமலதா கடலூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். அரசு போக்குவரத்து கழகம் கடனில் உள்ளது. அனைத்துப் பேருந்துகளிலும் இலவசம் என்று கொண்டு வந்த திட்டம், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பிட்ட பேருந்துகளுக்கு மட்டும் இலவசப் பயணம் என்று அறிவிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அதை நான் வரவேற்கிறேன்.

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்ய வேண்டும். அதில் முறைகேடுகள் நடப்பதாக பல தரப்பட்ட அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தேர்தல் துறை மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் முறைகேடுகள் நடைபெறுவதை முழுமையாக தடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *