மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்!

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 10- மதுராந்தகம், தாராபுரம் தொகுதி களுக்கு நடந்த இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தவெக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும் தாராபுரத்தில் சத்தியபாமாவும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. மதுராந்தகத்தில் ஆளுங்கட்சியான தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளராக பரந்தாமன், அதிமுக வேட்பாளராக கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் மற்றும் சுயேச்சைகள் என 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக வேட்பாளராக சுகன்யா, அதிமுக வேட்பாளராக பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கார்த்திகா மற்றும் சுயேச்சைகள் என 22 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். இரண்டு தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவியது.

மதுராந்தகம் தொகுதியில் 1,84,422 வாக்குகள் மற்றும் 864 அஞ்சல் வாக்குகள் என மொத்தம் 1,85,292 வாக்குகள் பதிவாகின. தாராபுரம் தொகுதி யில் 1,79,216 வாக்குகள், 1,316 அஞ்சல் வாக்குகள் என மொத்தம் 1,80,532 வாக்குகள் பதிவாகின.

மதுராந்தகத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஆத்தூர் பகுதியில் உள்ள பல்நோக்கு பயிற்சி மய்யத்தில் நேற்று (9.10.2026) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 21 சுற்றுகளாக வாக்குகள் எண்னப்பட்டன.

நிறைவாக 137 அஞ்சல் வாக்குகள் உள்பட 74,048 வாக்குகள் (39.96 சதவீதம்) பெற்று மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் நரேந்திரன், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுவிடம் வழங்கினார்.

திமுக வேட்பாளர் பரந்தாமன் 358 அஞ்சல் வாக்குகள் உள்பட 54,008 வாக்குகள் (29.15 சதவீதம்) பெற்று 2-வது இடமும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 322 அஞ்சல் வாக்குகள் உள்பட 47,450 (25.61 சதவீதம்) வாக்குகள் பெற்று 3 ஆம் இடமும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் 2,709 வாக்குகள் (1.46 சதவீதம்) பெற்று 4 ஆம் இடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி 9 அஞ்சல் வாக்குகள் உள்பட 1,986 வாக்குகள் (1.07 சதவீதம்) பெற்று 5 ஆம் இடமும் பிடித்தனர். நோட்டாவுக்கு 652 வாக்குகள் (0.35 சதவீதம்) கிடைத்தது. தவெக, திமுக, அதிமுக வேட்பாளர்களை தவிர, நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 24 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

தாராபுரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் நேற்று (9.10.2026) காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் அஞ்சல் வாக்குகளை 2 மேஜைகளில் எண்ணும் பணி தொடங்கியது. 8.30 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை விட அதிமுக வேட்பாளர் சுகன்யா 5 வாக்குகளும், 2 ஆம் சுற்றில் 592 வாக்குகளும், 3 ஆம் சுற்றில் 810 வாக்குகளும், 4 ஆம் சுற்றில் 958 வாக்குகளும் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருந்தார். அதேநேரம், 5 ஆம் சுற்றில் தவெக வேட்பாளர் சத்யபாமா 724 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகிக்கத் தொடங்கினார். தொடர்ந்து முன்னிலை வகித்த தவெக வேட்பாளர் சத்யபாமா 255 அஞ்சல் வாக்குகள் உள்பட 66,841 வாக்குகள் (37.02 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரும், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியருமான ஃபெலிக்ஸ் ராஜா, தவெக வேட்பாளர் சத்யபாமாவிடம் வழங்கினார்.

திமுக வேட்பாளர் சுகன்யா 613 அஞ்சல் வாக்குகள் உ்ளபட 57,370 வாக்குகள் (31.78 சதவீதம்) பெற்று  2 ஆம் இடமும், அதிமுக வேட்பாளர் பானுமதி 406 அஞ்சல் வாக்குகள் உள்பட 45,280 வாக்குகள் (25.08 சதவீதம்) பெற்று 3 ஆம் இடமும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 19 தபால் வாக்குகள் உள்பட 5,268 வாக்குகள் (2.92 சதவீதம்) பெற்று 4 ஆம் இடமும், இந்திய கம்யூனிஸ் கட்சி வேட்பாளர் லட்சுமணன் 7 அஞ்சல் வாக்குகள் உள்பட 1,157 வாக்குகள் (0.64 சதவீதம்) பெற்று 5 ஆம் இடமும் பிடித்தனர். நோட்டாவுக்கு 677 வாக்குகள் (0.38 சதவீதம்) கிடைத்தன. தவெக, திமுக, அதிமுக வேட்பாளர்களை தவிர, நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 19 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *