செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் : சிபிஅய் எச்சரிக்கை

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை,  ஆக.14– ‘டீப்ஃபேக்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்களுக்கு சிபிஅய் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஅய்-யின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) மூலம் ஒருவரின் முகம், குரல் மற்றும் உடல் அசைவுகளை அப்படியே நகலெடுத்து, அவர் செய்யாத ஒரு செயலைச் செய்தது போலவும், பேசாத ஒரு விசயத்தைப் பேசியது போலவும் போலியான காணொலிக் காட்சிப் பதிவுகள், ஒளிப்படங்கள் அல்லது ஆடியோக்களை உருவாக்கு வதே ‘டீப்ஃபேக்’ ஆகும். இவை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் உண்மையானவை போலவே இருக்கும். இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மக்களின் பணத்தை பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின் றனர். எனவே, அதிர்ச்சியூட்டும் அல்லது உணர்ச் சிகரமான காணொலிக் காட்சிப் பதிவுகள், ஒளிப்படங்கள் மற்றும் ஆடியோக் களை மற்றவர்களுக்குப் பகிரும் முன், அதன் உண்மைத் தன்மையை மக்கள் ஆராய வேண்டும். காணொலிக் கால் மூல மாகவோ அல்லது அவசரத்தேவை என்று குரல் வழிச் செய்தியாகவோ யாரா வது பணம் கேட்டால், உறுதிப்படுத்தாமல் உடன டியாகப் பணத்தை அனுப்பக் கூடாது.

சந்தேகம் ஏற்பட்டால், அந்தச் செயலை உடனடியாக நிறுத்தி, உண்மைத் தன்மையைச் சரிபார்த்து, மோசடி என்று தெரிந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். செயற்கை நுண்ணறி வால் நம்ப முடியாத அளவுக்குப் போலி களை உருவாக்க முடியும். உங்கள் விழிப்புணர்வே உங்களுக்கான முதல் பாதுகாப்பு.

எதையும் நம்பும் முன் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும். யாரேனும் இணைய வழி மோசடியால் பாதிக்கப் பட்டால் 1930 என்ற எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *