பழனி அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவா? மூன்று பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பழநி, அக். 09- பழநி அருகே மானூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவுகள் கிடந்த நிகழ்வு தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்துள்ள மானூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்.5-ஆம் தேதி மீண்டும் பள்ளி திறந்தபோது, அங்குள்ள குடிநீர் தொட்டியில் மலக்கழிவுகள் போல் ஏதோ கிடப்பதை பார்த்த பணியாளர்கள், இதுகுறித்து தலைமையாசிரியர் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, உடனே அவர் பணியாளர்களை வைத்து குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தார்.

2 நாட்களுக்கு பிறகு இந்த நிகழ்வு நேற்று முன்தினம் (7.10.2026) மாணவர்களின் பெற்றோர், கிராமத்தினருக்கு தெரியவந்தது. அருவருக்கத்தக்க இந்த நிகழ்வை பள்ளி நிர்வாகம் மூடி மறைத்ததாகக் கூறி, பள்ளியை முற்றுகையிட்டு பெற் றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று (8.10.2026) காலை மீண்டும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், இந்த நிகழ்வுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரியும், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்வு குறித்து விசாரணை நடத்துவதற்காக வந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகநாதன், வட்டாரக் கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெற்றோருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், மாணவர்களின் பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் காலை உணவுத் திட்டத் தில் சமைக்கப்பட்ட உணவை கல்வித் துறை அதிகாரிகள் சாப் பிட்டதுடன், மாணவர்களுக்கு விநி யோகிக்கும் குடிநீரையும் குடித்தனர். இந்த நிகழ்வு குறித்து விசாரித்து, காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும், பள்ளி வளாகம், சமையல் கூடத்தை ஆய்வு செய்து, பள்ளி தலைமையாசிரியர், பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த நிகழ்வுக்குக் காரணமான அடையாளம் தெரியாத நபர் மீது கீரனூர் காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பிறகு, பெற்றோர் போராடும் முடிவை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த மலம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியையும் அப்புறப்படுத்தினர்.

இருப்பினும், பள்ளி மாணவர் களின் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட இந்த விவகாரம் தமிழ்நாடு முழு வதும் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *