தமிழ்நாட்டில் இளம் வாக்காளர்கள் சேர்க்கை 10ஆம் தேதி சிறப்பு முகாம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 08- சென்னை மாவட்டத்திற்குட் பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 4,079 வாக்குச் சாவடி மய்யங்களிலும், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதிய தாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை வாக் காளர்களை பதிவு செய்வதற்கான வசதியாக, 10.10.2026 (சனிக் கிழமை) மற்றும் 11.10.2026 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய இரு நாள்களில் சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது.

இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் எதிர்வரும் 10.10.2026 (சனிக்கிழமை) மற்றும் 11.10.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாள்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள அனைத்து 4,079 வாக்குச்சாவடி மய்யங்களிலும் நடைபெற உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில், இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை தகுதி பெறும் வாக்காளர்கள், உரிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமினை அணுகி, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *